EyeTamil News
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • விளையாட்டு
  • சினிமா
  • தொழில்நுட்பம்
Watch Live
பெறுபேறு கிடைக்கவில்லை
அனைத்து பெறுபேறுகளையும் பார்க்கவும்
  • கனடா
  • கியூபெக்
  • ஆரோக்கியம்
  • ஆன்மீகம்
  • துயர் பகிர்வு
  • இன்றைய ராசிபலன்
  • எம்மவர் நிகழ்வுகள்
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • விளையாட்டு
  • சினிமா
  • தொழில்நுட்பம்
பெறுபேறு கிடைக்கவில்லை
அனைத்து பெறுபேறுகளையும் பார்க்கவும்
EyeTamil News
Watch Live
முகப்பு உலகம்
ஹார்வி வெயின்ஸ்டீனுக்கு 15 ஆண்டுகள் சிறைத்தண்டனை

ஹார்வி வெயின்ஸ்டீனுக்கு 15 ஆண்டுகள் சிறைத்தண்டனை

புரட்டாதி 24, 2026
வகை: உலகம்
வாசிக்கும் நேரம்: 1 நிமிடம்
A A
Share on FacebookShare on Twitter

முன்னாள் ஹொலிவுட் தயாரிப்பாளர் ஹார்வி வெயின்ஸ்டீனுக்கு பாலியல் தாக்குதல் வழக்கில் நியூயோர்க் நீதிமன்றம் புதன்கிழமை 15 ஆண்டுகள் சிறைத்தண்டனை விதித்து தீர்ப்பளித்துள்ளது.

2006 ஆம் ஆண்டு தனது தயாரிப்பு உதவியாளராக இருந்த மிரியம் ஹேலி (Miriam Haley) மீது தனது மன்ஹாட்டன் வீட்டில் வைத்து பாலியல் தாக்குதல் நடத்தியதற்காக, 74 வயதான வெயின்ஸ்டீன் மீது கடந்த ஆண்டு நடத்தப்பட்ட மறுவிசாரணையில் குற்றச்சாட்டு நிரூபிக்கப்பட்டது.

முன்னதாக 2020ஆம் ஆண்டு இவருக்கு விதிக்கப்பட்ட 23 ஆண்டுகள் சிறைத்தண்டனையை, நியூயோர்க் நீதிமன்றம் 2024 இல் ரத்து செய்து, அவருக்கு நியாயமான விசாரணை கிடைக்கவில்லை எனத் தெரிவித்தது.

இதனைத் தொடர்ந்து 2025 ஜூன் மாதம் நடைபெற்ற மறுவிசாரணையில், மிரியம் ஹேலி தொடர்பான குற்றச்சாட்டில் அவர் குற்றவாளியாகக் காணப்பட்டார்.

அதேவேளை, முன்னாள் மொடலான காஜா சொகோலா (Kaja Sokola) மீதான தாக்குதல் குற்றச்சாட்டிலிருந்து அவர் விடுவிக்கப்பட்டார்.

ஜெசிகா மேன் (Jessica Mann) தொடர்பான பாலியல் குற்றச்சாட்டில் நடுவர் மன்றம் ஒருமித்த முடிவை எட்டாத நிலையில், மே மாதம் இடம்பெற்ற மூன்றாவது விசாரணையும் முடிவின்றி முடிவடைந்தது.

தொடர்ந்து நான்காவது விசாரணையில் சாட்சியமளிக்க மேன் மறுத்ததைத் தொடர்ந்து, அடுத்த மாதத்தில் அக்குற்றச்சாட்டை அரச வழக்கறிஞர்கள் கைவிட்டனர்.

மன்ஹாட்டன் மாவட்ட வழக்கறிஞர் அல்வின் பிராக் (Alvin Bragg), மிரியம் ஹேலியின் சாட்சியத்தைப் பாராட்டியதுடன், அவரது துணிச்சலைப் போற்றினார்.

இருப்பினும், வெயின்ஸ்டீன் தான் எவ்வித பாலியல் அத்துமீறல்களிலும் ஈடுபடவில்லை எனக் கூறி குற்றச்சாட்டுகளை மறுத்துள்ளார்.

நீதிபதி கர்டிஸ் ஃபார்பர் (Curtis Farber) அளித்த இந்தத் தீர்ப்பை எதிர்த்து வெயின்ஸ்டீனின் பேச்சாளர் அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளார்.

மிராமேக்ஸ் (Miramax) நிறுவனத்தின் இணை நிறுவனரான வெயின்ஸ்டீனுக்கு, 2022 ஆம் ஆண்டு கலிபோர்னியாவில் நடந்த பாலியல் குற்ற வழக்கில் 16 ஆண்டுகள் சிறைத்தண்டனை விதிக்கப்பட்டது.

அந்தத் தண்டனையை கலிபோர்னியா மேல்முறையீட்டு நீதிமன்றம் உறுதிசெய்த போதிலும், அவருக்கு மீண்டும் தண்டனை விவரம் மறுஆய்வு செய்யப்பட வேண்டும் என உத்தரவிட்டுள்ளது.

பிரபல நடிகைகள் உட்பட 100 க்கும் மேற்பட்ட பெண்கள் வெயின்ஸ்டீன் மீது குற்றச்சாட்டுகளை முன்வைத்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

தொடர்புடைய செய்திகள்

ஆசிய விளையாட்டில் வெண்கலம் வென்ற தமிழக வீரருக்கு ரூ.30 லட்சம் பரிசு
உலகம்

ஆசிய விளையாட்டில் வெண்கலம் வென்ற தமிழக வீரருக்கு ரூ.30 லட்சம் பரிசு

புரட்டாதி 24, 2026
தமிழக மாணவர்களுடன் ராகுல் காந்தி கலந்துரையாடல்
உலகம்

தமிழக மாணவர்களுடன் ராகுல் காந்தி கலந்துரையாடல்

புரட்டாதி 24, 2026
அரசுத்திட்டங்களின் பலன்களைத் அனைவருக்கும் கொண்டு சேர்க்க வேண்டும் – பிரதமர் மோடி
உலகம்

அரசுத்திட்டங்களின் பலன்களைத் அனைவருக்கும் கொண்டு சேர்க்க வேண்டும் – பிரதமர் மோடி

புரட்டாதி 24, 2026
எபோலாவை எதிர்கொள்ள அமெரிக்கா 267 மில்லியன் டொலர் உதவி
உலகம்

எபோலாவை எதிர்கொள்ள அமெரிக்கா 267 மில்லியன் டொலர் உதவி

புரட்டாதி 24, 2026
டெங்கு தடுப்பு நடவடிக்கை தொடர்பில் முதலமைச்சர் சி. ஜோசப் விஜய் உத்தரவு
உலகம்

டெங்கு தடுப்பு நடவடிக்கை தொடர்பில் முதலமைச்சர் சி. ஜோசப் விஜய் உத்தரவு

புரட்டாதி 22, 2026
ஐஐடி மாணவர் தற்கொலை: பேராசிரியரின் டீன் பதவி இடைநீக்கம்
உலகம்

ஐஐடி மாணவர் தற்கொலை: பேராசிரியரின் டீன் பதவி இடைநீக்கம்

புரட்டாதி 22, 2026
# # #
விளம்பரம்

வாராந்திர செய்திகள்

இன்றைய செய்திகள்
புதன்செவ்வாய்திங்கள்ஞாயிறுசனிவெள்ளி

சிறப்புச் செய்திகள்

மேல் மாகாண போக்குவரத்து அதிகார சபையின் முன்னாள் தலைவர் கைது

பல இலட்சம் பெறுமதியான அம்பர்கிரிஸுடன் ஒருவர் கைது

9 மணத்தியாலங்கள் முன்னர்
முருங்கைக்காயின் விலையில் வீழ்ச்சி

முருங்கைக்காயின் விலையில் வீழ்ச்சி

1 நாள் முன்னர்
யாழில் திடீர் மின்சார விநியோக தடை

யாழில் திடீர் மின்சார விநியோக தடை

3 நாட்கள் முன்னர்
யாழில். பிளாஸ்டிக் கழிவுகளை சேகரிக்கும் மையம் திறப்பு

யாழில். பிளாஸ்டிக் கழிவுகளை சேகரிக்கும் மையம் திறப்பு

2 நாட்கள் முன்னர்
யாழில். புகையிரத விபத்தில் சிக்கி ஒருவர்  உயிரிழப்பு

யாழில். புகையிரத விபத்தில் சிக்கி ஒருவர் உயிரிழப்பு

10 மணத்தியாலங்கள் முன்னர்

எம்மவர் நிகழ்வுகள்

மன்னிக்கவும், நிகழ்வுகள் எதுவும் இல்லை!
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • விளையாட்டு
  • சினிமா
  • தொழில்நுட்பம்
+94 77 812 0744

© 2024 Eye Tamil Media Network | All Rights Reserved

பெறுபேறு கிடைக்கவில்லை
அனைத்து பெறுபேறுகளையும் பார்க்கவும்
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • விளையாட்டு
  • சினிமா
  • தொழில்நுட்பம்
  • கனடா
  • கியூபெக்
  • ஆரோக்கியம்
  • ஆன்மீகம்
  • துயர் பகிர்வு
  • இன்றைய ராசிபலன்

© 2024 Eye Tamil Media Network | All Rights Reserved

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In