EyeTamil News
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • விளையாட்டு
  • சினிமா
  • தொழில்நுட்பம்
Watch Live
பெறுபேறு கிடைக்கவில்லை
அனைத்து பெறுபேறுகளையும் பார்க்கவும்
  • கனடா
  • கியூபெக்
  • ஆரோக்கியம்
  • ஆன்மீகம்
  • துயர் பகிர்வு
  • இன்றைய ராசிபலன்
  • எம்மவர் நிகழ்வுகள்
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • விளையாட்டு
  • சினிமா
  • தொழில்நுட்பம்
பெறுபேறு கிடைக்கவில்லை
அனைத்து பெறுபேறுகளையும் பார்க்கவும்
EyeTamil News
Watch Live
முகப்பு அண்மைய செய்திகள்
கீரிமலை குப்பை மேட்டு பகுதிக்கு நேரில் சென்ற வடக்கு ஆளுநர் தலைமையிலான குழு

கீரிமலை குப்பை மேட்டு பகுதிக்கு நேரில் சென்ற வடக்கு ஆளுநர் தலைமையிலான குழு

புரட்டாதி 24, 2026
வகை: அண்மைய செய்திகள், இலங்கை
வாசிக்கும் நேரம்: 1 நிமிடம்
A A
Share on FacebookShare on Twitter

கீரிமலை பகுதியில் கொட்டப்பட்ட மருத்துவ கழிவுகள் உள்ளிட்ட கழிவுகளை மீள அள்ளுமாறு வடமாகாண உள்ளூராட்சி ஆணையாளரின் கடுமையான உத்தரவின் பிரகாரம் கழிவுகள் மீள அள்ளப்படுவதனையும், கழிவுகள் கொட்டப்பட்ட பகுதிகளையும் வடமாகாண ஆளுநர் தலைமையிலான குழுவினர் இன்றைய தினம் வியாழக்கிழமை நேரில் பார்வையிட்டனர்.

கீரிமலை பகுதியில் வலி. தெற்கு பிரதேச சபையினர் சுமார் 300 டிப்பர் கழிவுகளையும் , வலி. வடக்கு பிரதேச சபையினர் தெல்லிப்பழை புற்றுநோய் வைத்தியசாலையின் வைத்திய கழிவுகளையும் கொட்டியிருந்தனர்.

இது தொடர்பில் வலி.வடக்கு பிரதேச சபை உறுப்பினர்கள் உள்ளிட்ட பல்வேறு தரப்பினரும் கடுமையான எதிர்ப்பு தெரிவித்து வந்த நிலையில் ,கடந்த 17ஆம் திகதி வலி. வடக்கு பிரதேச சபையின் பெரும்பாலான உறுப்பினர்கள் சபை அமர்வினை புறக்கணித்தனர்.

அதனை அடுத்து வடமாகாண உள்ளூராட்சி ஆணையாளர் ச. சுதர்சன் , மத்திய சுற்றாடல்துறை அதிகார சபையினர் உள்ளிட்ட தரப்பினர் கீரிமலையில் குப்பைகளை கொட்டிய இடங்களை நேரில் பார்வையிட்டு , மருத்துவ கழிவுகள் உள்ளிட்ட அனைத்து கழிவுகளும் அங்கிருந்து அகற்றப்பட வேண்டும் என வலி. வடக்கு பிரதேச சபை மற்றும் வலி. தெற்கு பிரதேச சபையினருக்கு கடுமையான உத்தரவினை பிறப்பித்திருந்தார்.

அதனை தொடர்ந்து வலி. தெற்கு பிரதேச சபையினர் தாம் கொட்டிய கழிவுகளையும், வலி. வடக்கு பிரதேச சபையினர் தாம் கொட்டிய கழிவுகளையும் மீள அள்ளி வரும் நிலையில் கடந்த செவ்வாய்க்கிழமை உதவி உள்ளூராட்சி ஆணையாளரும் நேரில் பணிகளை பார்வையிட்டார்.

இந்நிலையில் , இன்றைய தினம் வியாழக்கிழமை வடமாகாண ஆளுநர் தலைமையில் , வடமாகாண உள்ளூராட்சி ஆணையாளர், வலி. வடக்கு மற்றும் வலி. தெற்கு பிரதேச சபையின் தவிசாளர்கள் உள்ளிட்டோர் கழிவுகளை மீள அள்ளும் பணிகளை நேரில் பார்வையிட்டனர்.

அதேவேளை, கீரிமலை பகுதியில் கொட்டப்பட்ட கழிவுகளை மீள அள்ள நடவடிக்கை எடுக்க உரிய தரப்பினருக்கு பணிக்க வேண்டும் என கோரி கடந்த ஆகஸ்ட் மாதம் 03ஆம் திகதி வடமாகாண ஆளுநருக்கு வலி. வடக்கு பிரதேச சபையின் 26 உறுப்பினர்கள் கையொப்பமிட்டு மகஜர் கையளித்திருந்தமையும் குறிப்பிடத்தக்கது.

தொடர்புடைய செய்திகள்

ஹட்டன் கொழும்பு பிரதான வீதியில் மண்சரிவு
அண்மைய செய்திகள்

ஹட்டன் கொழும்பு பிரதான வீதியில் மண்சரிவு

புரட்டாதி 24, 2026
நுவரெலியா கல்வி வலயத்திற்கு விசேட விடுமுறை
அண்மைய செய்திகள்

நுவரெலியா கல்வி வலயத்திற்கு விசேட விடுமுறை

புரட்டாதி 24, 2026
கிளிநொச்சியில் மோட்டார் சைக்கிள் மோதி சிறுவன்  பலி
அண்மைய செய்திகள்

கிளிநொச்சியில் மோட்டார் சைக்கிள் மோதி சிறுவன் பலி

புரட்டாதி 24, 2026
கிளிநொச்சியில் இடம்பெற்ற விசேட கலந்துரையாடல்
அண்மைய செய்திகள்

கிளிநொச்சியில் இடம்பெற்ற விசேட கலந்துரையாடல்

புரட்டாதி 24, 2026
தையிட்டி விகாரை வழக்கு – ஜனவரி மாதம் ஒத்திவைப்பு
அண்மைய செய்திகள்

தையிட்டி விகாரை வழக்கு – ஜனவரி மாதம் ஒத்திவைப்பு

புரட்டாதி 24, 2026
வெடுக்குநாறிமலை வழிபாடு தொடர்பான பொலிசாரின் விண்ணப்பம் நீதிமன்றால் நிராகரிப்பு
அண்மைய செய்திகள்

வெடுக்குநாறிமலை வழிபாடு தொடர்பான பொலிசாரின் விண்ணப்பம் நீதிமன்றால் நிராகரிப்பு

புரட்டாதி 24, 2026
# # #
விளம்பரம்

வாராந்திர செய்திகள்

இன்றைய செய்திகள்
வியாழன்புதன்செவ்வாய்திங்கள்ஞாயிறுசனி

சிறப்புச் செய்திகள்

வருடாந்த மாவட்ட மாணவர் தூதுவர் மாநாடு – 2026

வருடாந்த மாவட்ட மாணவர் தூதுவர் மாநாடு – 2026

6 நாட்கள் முன்னர்
தியாக தீபம் நினைவிட ஒலிபெருக்கி பறிமுதல் – பொலிஸ் பொறுப்பதிகாரியுடன் கஜேந்திரகுமார் பேச்சு

தியாக தீபம் நினைவிட ஒலிபெருக்கி பறிமுதல் – பொலிஸ் பொறுப்பதிகாரியுடன் கஜேந்திரகுமார் பேச்சு

5 நாட்கள் முன்னர்
நல்லூரில் தியாக தீபம் திலீபனின் 39 வது ஆண்டு நினைவேந்தல் நிகழ்வு

நல்லூரில் தியாக தீபம் திலீபனின் 39 வது ஆண்டு நினைவேந்தல் நிகழ்வு

4 நாட்கள் முன்னர்
நல்லூரில் இடம்பெற்ற தியாக தீபம் திலீபனின் ஏழாம் நாள் நிகழ்வு

நல்லூரில் இடம்பெற்ற தியாக தீபம் திலீபனின் ஏழாம் நாள் நிகழ்வு

3 நாட்கள் முன்னர்
வடக்கு சுகாதாரத்துறையின் நிதி மற்றும் நிர்வாக சவால்கள் குறித்து ஆராய்வு

வடக்கு சுகாதாரத்துறையின் நிதி மற்றும் நிர்வாக சவால்கள் குறித்து ஆராய்வு

5 நாட்கள் முன்னர்

எம்மவர் நிகழ்வுகள்

மன்னிக்கவும், நிகழ்வுகள் எதுவும் இல்லை!
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • விளையாட்டு
  • சினிமா
  • தொழில்நுட்பம்
+94 77 812 0744

© 2024 Eye Tamil Media Network | All Rights Reserved

பெறுபேறு கிடைக்கவில்லை
அனைத்து பெறுபேறுகளையும் பார்க்கவும்
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • விளையாட்டு
  • சினிமா
  • தொழில்நுட்பம்
  • கனடா
  • கியூபெக்
  • ஆரோக்கியம்
  • ஆன்மீகம்
  • துயர் பகிர்வு
  • இன்றைய ராசிபலன்

© 2024 Eye Tamil Media Network | All Rights Reserved

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
imunify-bot-check