கனடா ஒட்டாவாவின் சவுத் கீஸ் (South Keys) பகுதிக்கு அருகில் சனிக்கிழமை (September 26) பிற்பகல் இடம்பெற்ற வாகன விபத்தில் 74 வயதுடைய முதியவர் ஒருவர் உயிருக்கு ஆபத்தான காயங்களுக்கு உள்ளாகியுள்ளார்.
பாங் வீதி (Bank Street) மற்றும் அல்பி யோன் வீதி (Albion Road) சந்திப்பில் பிற்பகல் 1:20 மணியளவில் இந்த விபத்து சம்பவித்துள்ளதாக ஒட்டாவா காவல்துறையினர் ஊடக அறிக்கையொன்றில் தெரிவித்துள்ளனர்.
விபத்தில் காயமடைந்த பாதசாரி உடனடியாக சிகிச்சைக்காக ஒட்டாவா சிவிக் மருத்துவமனைக்கு (Ottawa Civic Hospital) கொண்டு செல்லப்பட்டார்.
இதேவேளை, விபத்துடன் தொடர்புடைய காரின் ஓட்டுநர் மருத்துவ உதவியாளர்களால் பரிசோதிக்கப்பட்ட போதிலும், அவர் மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்படவில்லை என அவசர மருத்துவ உதவிப் பிரிவினர் தெரிவித்துள்ளனர்.
இந்த விபத்து தொடர்பான விசாரணைகளை காவல்துறையின் வீதி விபத்து விசாரணைப் பிரிவு (Fatal Collision Investigation Unit) முன்னெடுத்து வருகின்றது.
இச்சம்பவத்தை நேரில் கண்டவர்கள் அல்லது இது தொடர்பான காணொளிப் பதிவுகளை வைத்திருப்பவர்கள் காவல்துறையினரைத் தொடர்பு கொள்ளுமாறு கேட்டுக்கொள்ளப்பட்டுள்ளனர்.











