வவுனியா, மதீனா நகரில் அல் மதீனா விளையாட்டு கழகத்திற்கான விளையாட்டு மைதானம் ஒன்று இன்றையதினம் திறந்து வைக்கப்பட்டிருந்தது.
விளையாட்டு கழகத்தின் தலைவர் ஹவீல் தலைமையில் நடைபெற்ற நிகழ்வில், நகர பள்ளிவாசலின் தலைவர் ஆரிப் மற்றும் மஸ்யுல் ஜாமியா ஜும்மா பள்ளிவாசலின் தலைவர் ஏ.சி.ஜி. ஆப்தீன் ஆகியோர் இணைந்து மைதானத்தை திறந்து வைத்தனர்.
அத்துடன் இந்நிகழ்வை முன்னிட்டு “மதீனா பிரீமியர் லீக் – சீசன் 06” மென்பந்து கிரிக்கெட் தொடரினையும் ஆரம்பித்து வைக்கப்பட்டிருந்தது.
இதன் ஆரம்ப நிகழ்வாக சுழற் கேடயத்தினை பூந்தோட்டம் சந்தியில் இருந்து ஊர்வலமாக எடுத்து வரப்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.











