EyeTamil News
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • விளையாட்டு
  • சினிமா
  • தொழில்நுட்பம்
Watch Live
பெறுபேறு கிடைக்கவில்லை
அனைத்து பெறுபேறுகளையும் பார்க்கவும்
  • கனடா
  • கியூபெக்
  • ஆரோக்கியம்
  • ஆன்மீகம்
  • துயர் பகிர்வு
  • இன்றைய ராசிபலன்
  • எம்மவர் நிகழ்வுகள்
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • விளையாட்டு
  • சினிமா
  • தொழில்நுட்பம்
பெறுபேறு கிடைக்கவில்லை
அனைத்து பெறுபேறுகளையும் பார்க்கவும்
EyeTamil News
Watch Live
முகப்பு இலங்கை
யாழில் இடம்பெறவுள்ள வடக்கு ஏற்றுமதியாளர்கள் மாநாடு!

யாழில் இடம்பெறவுள்ள வடக்கு ஏற்றுமதியாளர்கள் மாநாடு!

ஐப்பசி 14, 2026
வகை: இலங்கை, முதன்மை செய்தி
A A
Share on FacebookShare on Twitter

வடக்கு மாகாணத்தின் உற்பத்திப் பொருட்கள் மற்றும் சேவைகளை சர்வதேசச் சந்தைகளுடன் இணைக்கும் நோக்கில், ‘வடக்கு ஏற்றுமதியாளர்கள் மாநாடு 2027’ எதிர்வரும் ஜனவரி மாதம் 20, 21ஆம் திகதிகளில் யாழ்ப்பாணம் திருவள்ளுவர் பண்பாட்டு மையத்தில் நடைபெறவுள்ளது.

இந்த மாநாட்டைச் சிறப்பாக முன்னெடுப்பது தொடர்பான விசேட கலந்துரையாடல், வடக்கு மாகாண ஆளுநர் நா.வேதநாயகன் தலைமையில் செவ்வாய்க்கிழமை ஆளுநர் செயலகத்தில் நடைபெற்றது.

இலங்கை முகாமைத்துவக் கழகத்தின் ஏற்பாட்டில், கைத்தொழில் மற்றும் தொழில் முயற்சியாண்மை அபிவிருத்தி அமைச்சின் தலைமையில் இந்த மாநாடு ஏற்பாடு செய்யப்படுகிறது. இதற்கு யாழ்ப்பாணத்திலுள்ள இந்தியத் துணைத் தூதரகம், ஏற்றுமதி அபிவிருத்திச் சபை மற்றும் தேசிய ஏற்றுமதியாளர் சம்மேளனம் ஆகியன ஒத்துழைப்பு வழங்குகின்றன.

இந்த மாநாட்டின் ஊடாக 50க்கும் மேற்பட்ட நேரடி வர்த்தகச் சந்திப்புகளை ஏற்பாடு செய்வது இலக்காகக் கொள்ளப்பட்டுள்ளது.

இரண்டு நாட்கள் நடைபெறவுள்ள மாநாட்டின் முதல் நாளில், சர்வதேசச் சந்தை வாய்ப்புகள் தொடர்பான அமர்வுகளும், சிறிய மற்றும் நடுத்தரத் தொழில் முயற்சியாளர்களின் உற்பத்திப் பொருட்கள் மற்றும் சேவைகள் தொடர்பான அறிமுகங்களும் இடம்பெறவுள்ளன.

இரு நாட்களிலும் வர்த்தகக் கண்காட்சிகள் மற்றும் நேரடி வர்த்தகச் சந்திப்புகள் நடைபெறவுள்ளதுடன், இரண்டாம் நாளில் வர்த்தகப் புரிந்துணர்வு ஒப்பந்தங்களைக் கைச்சாத்திடவும் திட்டமிடப்பட்டுள்ளது.

இந்த முயற்சி கண்காட்சியுடன் மட்டும் மட்டுப்படுத்தப்படாமல், வடக்கு மாகாணத்தின் உற்பத்தித் திறனை அதிகரித்தல், ஏற்றுமதித் துறையை விரிவுபடுத்துதல் மற்றும் புதிய முதலீடுகளை ஈர்த்தல் ஆகியவற்றை நோக்கமாகக் கொண்டுள்ளது.

மேலும், நீண்டகால அடிப்படையில் நிரந்தரமான கண்காட்சி மற்றும் வர்த்தகத் தளமொன்றை உருவாக்குவதற்கான வாய்ப்புகளும் ஆராயப்படவுள்ளன.

குறித்த கலந்துரையாடலில் வடக்கு மாகாண ஆளுநரின் செயலாளர் மற்றும் இலங்கை முகாமைத்துவக் கழகத்தின் உறுப்பினர்கள் கலந்துகொண்டனர்.

தொடர்புடைய செய்திகள்

ஸ்ரீலங்கன் எயார்லைன்ஸ் நிறுவனம் விடுத்துள்ள முக்கிய அறிவிப்பு
அண்மைய செய்திகள்

ஸ்ரீலங்கன் எயார்லைன்ஸ் நிறுவனம் விடுத்துள்ள முக்கிய அறிவிப்பு

ஐப்பசி 14, 2026
நுவரெலியாவில் சட்டவிரோத மாணிக்கக்கல் அகழ்வு – ஐவர் கைது!
அண்மைய செய்திகள்

நுவரெலியாவில் சட்டவிரோத மாணிக்கக்கல் அகழ்வு – ஐவர் கைது!

ஐப்பசி 14, 2026
முன்னாள் அமைச்சர் பெசில் ராஜபக்ஷவுக்கு பிடியாணை உத்தரவு
அண்மைய செய்திகள்

முன்னாள் அமைச்சர் பெசில் ராஜபக்ஷவுக்கு பிடியாணை உத்தரவு

ஐப்பசி 14, 2026
பம்பலப்பிட்டியில் உள்ள அடுக்குமாடி குடியிருப்பில் திடீர் தீப்பரவல்
அண்மைய செய்திகள்

பம்பலப்பிட்டியில் உள்ள அடுக்குமாடி குடியிருப்பில் திடீர் தீப்பரவல்

ஐப்பசி 14, 2026
சுரேஷ் சலேவின் மனு ஒத்திவைப்பு
அண்மைய செய்திகள்

சுரேஷ் சலேவின் மனு ஒத்திவைப்பு

ஐப்பசி 14, 2026
கிளிநொச்சியில் போதைப்பொருள் ஒழிப்பு தொடர்பில் விசேட கலந்துரையாடல்
அண்மைய செய்திகள்

கிளிநொச்சியில் போதைப்பொருள் ஒழிப்பு தொடர்பில் விசேட கலந்துரையாடல்

ஐப்பசி 14, 2026
# # #
விளம்பரம்

வாராந்திர செய்திகள்

இன்றைய செய்திகள்
புதன்செவ்வாய்திங்கள்ஞாயிறுசனிவெள்ளி

சிறப்புச் செய்திகள்

ஜனாதிபதி முறைமையை முற்றாக ஒழிக்க வேண்டும் – ஜனநாயக தமிழ்த் தேசியக் கூட்டணி

ஜனாதிபதி முறைமையை முற்றாக ஒழிக்க வேண்டும் – ஜனநாயக தமிழ்த் தேசியக் கூட்டணி

4 நாட்கள் முன்னர்
யாழில். இடம்பெற்ற  விபத்தில் இரு இளைஞர்கள் உயிரிழப்பு

யாழில். இடம்பெற்ற விபத்தில் இரு இளைஞர்கள் உயிரிழப்பு

1 நாள் முன்னர்
திராய்மடு கசிப்பு வியாபாரம் தொடர்பில்  பொலிஸ் அதிகாரிகள் மீது குற்றச்சாட்டு!

திராய்மடு கசிப்பு வியாபாரம் தொடர்பில் பொலிஸ் அதிகாரிகள் மீது குற்றச்சாட்டு!

2 நாட்கள் முன்னர்
கிராண்ட்பாஸ் பகுதியில் திடீர் தீப்பரவல் – 10 வீடுகள் சேதம்

கிராண்ட்பாஸ் பகுதியில் திடீர் தீப்பரவல் – 10 வீடுகள் சேதம்

1 நாள் முன்னர்
நுவரெலியா மாவட்டத்தில் வெள்ளம் ஏற்படும் அபாயம்!

நுவரெலியா மாவட்டத்தில் வெள்ளம் ஏற்படும் அபாயம்!

9 மணத்தியாலங்கள் முன்னர்

எம்மவர் நிகழ்வுகள்

மன்னிக்கவும், நிகழ்வுகள் எதுவும் இல்லை!
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • விளையாட்டு
  • சினிமா
  • தொழில்நுட்பம்
+94 77 812 0744

© 2024 Eye Tamil Media Network | All Rights Reserved

பெறுபேறு கிடைக்கவில்லை
அனைத்து பெறுபேறுகளையும் பார்க்கவும்
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • விளையாட்டு
  • சினிமா
  • தொழில்நுட்பம்
  • கனடா
  • கியூபெக்
  • ஆரோக்கியம்
  • ஆன்மீகம்
  • துயர் பகிர்வு
  • இன்றைய ராசிபலன்

© 2024 Eye Tamil Media Network | All Rights Reserved

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
imunify-bot-check