கடந்த 12 ஆம் திகதி நுவரெலியா, அம்பேவல – பட்டிப்பொல பகுதியில் சட்டவிரோதமாக மாணிக்கக்கல் அகழ்வில் ஈடுபட்ட ஐந்து சந்தேகநபர்கள் கைது செய்யப்பட்டிருந்தனர்.
கைதான ஐவரும் நேற்றையதினம் (13) நுவரெலியா நீதிவான் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டனர்.
குறித்த ஐவரும் கொத்மலை ஓயாவுக்கு நீர் செல்லும் எல்ஜின் ஓயாவுக்கு அருகில் பெரிய குழிகளைத் தோண்டி, மாணிக்கக்கல் அகழ்வில் ஈடுபட்டிருந்ததாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
மேலும் நீதிமன்ற உத்தரவுப்படி ஐவருக்கும் தலா 45,000 ரூபா வீதம் மொத்தம் 2,25,000 ரூபாவும், இழப்பீடு தொகையாக 25,000 ரூபாயையும் சேர்த்து 2,50,000 ஆக அபராதம் விதிக்கப்பட்டுள்ளது.











