செம்மணி மனிதப் புதைகுழி தொடர்பான வழக்கு விசாரணைகள் இன்று யாழ்ப்பாணம் நீதவான் நீதிமன்றில் நடைபெற்றன.
இதன்போது, தொல்லியல் பேராசிரியர் ராஜ் சோமதேவாவினால் இடைக்கால அறிக்கை மன்றில் சமர்ப்பிக்கப்பட்டுள்ளது.
அத்துடன், குற்றப் புலனாய்வுப் பிரிவினரால் இரண்டு அறிக்கைகளும் நீதிமன்றில் சமர்ப்பிக்கப்பட்டுள்ளன.
குறித்த அறிக்கைகள் தொடர்பில் எதிர்வரும் நவம்பர் மாதம் 19ஆம் திகதி நடைபெறவுள்ள நிர்வாகக் குழுக் கூட்டத்தில் ஆராய்ந்து, மேலதிக நடவடிக்கைகள் தொடர்பில் தீர்மானம் எடுக்கப்படும் என நீதிமன்றம் அறிவித்துள்ளது.
செம்மணி மனிதப் புதைகுழி தொடர்பான வழக்கு விசாரணைகளில் சமர்ப்பிக்கப்பட்டுள்ள இந்த அறிக்கைகள், அடுத்தகட்ட நடவடிக்கைகள் தொடர்பான தீர்மானங்களுக்கு முக்கியத்துவம் பெறுகின்றன.











