யாழ்ப்பாணம் ஐந்து சந்தி பகுதியில் வீடொன்றில் சட்டவிரோதமாக இயங்கி வந்த மாட்டிறைச்சிக் கொல்களம் ஒன்றைப் பொலிஸார் முற்றுகையிட்டுள்ளனர்.
இதன்போது, இரண்டு பசு மாடுகள் உயிருடன் மீட்கப்பட்டுள்ளதுடன், பெருந்தொகையான இறைச்சியும் கைப்பற்றப்பட்டுள்ளது. சம்பவம் தொடர்பில் இருவர் கைது செய்யப்பட்டுள்ளனர்.
குறித்த வீட்டில் சட்டவிரோதமாக மாடுகள் இறைச்சியாக்கப்படுவதாகப் பொலிஸாருக்கு கிடைத்த இரகசியத் தகவலின் அடிப்படையில் இந்தச் சுற்றிவளைப்பு முன்னெடுக்கப்பட்டுள்ளது.
இதன்போது, மாடுகளை இறைச்சியாக்கி அவற்றைப் பங்கிட்டுக் கொண்டிருந்த இருவரைப் பொலிஸார் கைது செய்ததாகத் தெரிவிக்கப்படுகிறது.
சம்பவம் தொடர்பில் மேலதிக விசாரணைகளைப் பொலிஸார் முன்னெடுத்து வருகின்றனர்.











