EyeTamil News
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • விளையாட்டு
  • சினிமா
  • தொழில்நுட்பம்
Watch Live
பெறுபேறு கிடைக்கவில்லை
அனைத்து பெறுபேறுகளையும் பார்க்கவும்
  • கனடா
  • கியூபெக்
  • ஆரோக்கியம்
  • ஆன்மீகம்
  • துயர் பகிர்வு
  • இன்றைய ராசிபலன்
  • எம்மவர் நிகழ்வுகள்
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • விளையாட்டு
  • சினிமா
  • தொழில்நுட்பம்
பெறுபேறு கிடைக்கவில்லை
அனைத்து பெறுபேறுகளையும் பார்க்கவும்
EyeTamil News
Watch Live
முகப்பு சினிமா
தீபாவளி ரேசில் களமிறங்கும் தமிழ்ப் படங்கள்!

தீபாவளி ரேசில் களமிறங்கும் தமிழ்ப் படங்கள்!

ஐப்பசி 17, 2026
வகை: சினிமா
வாசிக்கும் நேரம்: 1 நிமிடம்
A A
Share on FacebookShare on Twitter

இந்த ஆண்டு தீபாவளித் திரை ரேசில் பல்வேறு தமிழ்ப் படங்கள் களமிறங்குகின்றன.

ஒவ்வொரு ஆண்டும் தீபாவளியின்போது முன்னணி நடிகர்களின் படங்கள் மோதுவது வழக்கம் என்றாலும், இந்த ஆண்டு ரஜினிகாந்த், கமல்ஹாசன், விஜய், அஜித் ஆகிய முன்னணி நட்சத்திரங்களின் படங்கள் களத்தில் இல்லை.

எனினும், புதுப்புது கதைகளுடன் தமிழ்ப் படங்கள் களமிறங்குவதால் தீபாவளி திரை விருந்து சூடுபிடிக்கத் தயாராகியுள்ளது.

நவம்பர் 8-ந்தேதி தீபாவளி பண்டிகை கொண்டாடப்பட உள்ள நிலையில், நவம்பர் 5 மற்றும் 6-ந்தேதிகளில் திரைப்படங்கள் திரைக்கு வரவுள்ளன.

இந்தத் தீபாவளி ரேசில் சூர்யாவின் ‘சீன்’ திரைப்படம் முக்கியப் போட்டியாளராகக் களமிறங்குகிறது.

மலையாளத்தில் ‘ஆவேஷம்’ படத்தின் மூலம் கவனம் ஈர்த்த இயக்குனர் ஜீத்து மாதவன் இப்படத்தை இயக்கியுள்ளார். ‘கருப்பு’, ‘விஸ்வநாத் அண்ட் சன்ஸ்’ வெற்றிகளுக்குப் பிறகு சூர்யா இப்படத்தின் மூலம் ஹாட்ரிக் வெற்றியை நோக்கி களமிறங்குகிறார்.

மேலும், நயன்தாரா நடிப்பில் உருவாகியுள்ள ‘மூக்குத்தி அம்மன்-2’ திரைப்படமும் இந்தப் போட்டியில் மிகுந்த கவனத்தை ஈர்க்கிறது.

முதல் பாகம் வரவேற்பைப் பெற்ற நிலையில், சுந்தர்.சி இப்படத்தை இயக்கியுள்ளார். ஹிப் ஹாப் ஆதி இசையமைத்துள்ள இப்படத்தில் பிரம்மாண்ட காட்சிகளுக்கும் ஆன்மிக அம்சங்களுக்கும் முக்கியத்துவம் அளிக்கப்பட்டுள்ளதாகத் தெரிகிறது. ‘ரைஸ் ஆப் மகாசக்தி’ என்ற பெயரில் வெளியான டீசர் எதிர்பார்ப்பை அதிகரித்துள்ளதுடன், தமிழ், மலையாளம், தெலுங்கு, கன்னடம் மற்றும் இந்தி ஆகிய மொழிகளிலும் இப்படம் வெளியாகவுள்ளது.

இதுதவிர, ஆக்ஷன், உணர்ச்சி மற்றும் குடும்பப் பாசம் ஆகியவற்றுடன் விஜய் ஆண்டனியின் ‘அப்பா குட்டி’ படமும் களமிறங்குகிறது.

மு.மாறன் இயக்கியுள்ள இப்படம் தந்தை-மகள் உறவை மையமாகக் கொண்டு உருவாகியுள்ளது.

நடனம் மற்றும் இசைக்கு முக்கியத்துவம் அளித்து மனோஜ் நிர்மலா ஸ்ரீதரன் இயக்கியுள்ள பிரபுதேவாவின் ‘மூன் வாக்’ திரைப்படமும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது.

குறிப்பாக, சுமார் 25 ஆண்டுகளுக்குப் பிறகு பிரபுதேவா – ஏ.ஆர்.ரகுமான் கூட்டணி மீண்டும் இணைந்துள்ளது இப்படத்தின் முக்கிய ஈர்ப்பாகப் பார்க்கப்படுகிறது.

தமிழ்ப் படங்களுக்கிடையிலான போட்டி ஒருபுறம் இருக்க, மறுபுறம் நிதேஷ் திவாரி இயக்கத்தில் ரன்பீர் கபூர், சாய் பல்லவி, யாஷ் உள்ளிட்டோர் நடித்துள்ள பிரம்மாண்ட இந்திப் படமான ‘ராமாயணா’வின் முதல் பாகமும் நவம்பர் 5-ந்தேதி திரைக்கு வருகிறது.

இந்தத் தீபாவளி ரேசில் எந்தப் படம் வெற்றிக் கொடியை உயர்த்தப் போகிறது என்பதை ரசிகர்களின் தீர்ப்பும் திரையரங்கு வசூலுமே தீர்மானிக்கும்.

தொடர்புடைய செய்திகள்

ஓராண்டை நிறைவு செய்த ‘பைசன் காளமாடன்’!
சினிமா

ஓராண்டை நிறைவு செய்த ‘பைசன் காளமாடன்’!

ஐப்பசி 18, 2026
நவம்பரில் வெளியாகும் துல்கர் சல்மானின் ‘AOT’
சினிமா

நவம்பரில் வெளியாகும் துல்கர் சல்மானின் ‘AOT’

ஐப்பசி 18, 2026
காற்றில் கரைந்த தேனிசைத் தென்றல்!
சினிமா

காற்றில் கரைந்த தேனிசைத் தென்றல்!

ஐப்பசி 18, 2026
நடிகர் ரஜினிகாந்துக்கு வாழ்த்துத் தெரிவித்த கமல்ஹாசன்!
சினிமா

நடிகர் ரஜினிகாந்துக்கு வாழ்த்துத் தெரிவித்த கமல்ஹாசன்!

ஐப்பசி 17, 2026
ரணபலிக்கு ‘U/A’ சான்றிதழ்!
சினிமா

ரணபலிக்கு ‘U/A’ சான்றிதழ்!

ஐப்பசி 15, 2026
வெளியானது ‘சத்தியவான் சாவித்திரி’ டீஸர்!
சினிமா

வெளியானது ‘சத்தியவான் சாவித்திரி’ டீஸர்!

ஐப்பசி 15, 2026
# # #
விளம்பரம்

வாராந்திர செய்திகள்

இன்றைய செய்திகள்
சனிவெள்ளிவியாழன்புதன்செவ்வாய்திங்கள்

சிறப்புச் செய்திகள்

யாழில் 85 மில்லியன் ரூபா பெறுமதியான சொத்துக்கள் முடக்கம்!

யாழில் 85 மில்லியன் ரூபா பெறுமதியான சொத்துக்கள் முடக்கம்!

2 நாட்கள் முன்னர்
வளிமண்டலவியல் திணைக்களம் விடுத்துள்ள எச்சரிக்கை

வளிமண்டலவியல் திணைக்களம் விடுத்துள்ள எச்சரிக்கை

5 நாட்கள் முன்னர்
ஸ்வர மஞ்சரி இறுதி போட்டிக்கு தெரிவான இருவர்!

ஸ்வர மஞ்சரி இறுதி போட்டிக்கு தெரிவான இருவர்!

3 நாட்கள் முன்னர்
ஷிரந்தி ராஜபக்ஷவுக்கு தொடர்ந்து விளக்கமறியல்

ஷிரந்தி ராஜபக்ஷவுக்கு தொடர்ந்து விளக்கமறியல்

4 நாட்கள் முன்னர்
வவுனியா ஆசிரியர் மொஹமட் றியாஸுக்குத் தேசிய விருது!

வவுனியா ஆசிரியர் மொஹமட் றியாஸுக்குத் தேசிய விருது!

4 நாட்கள் முன்னர்

எம்மவர் நிகழ்வுகள்

மன்னிக்கவும், நிகழ்வுகள் எதுவும் இல்லை!
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • விளையாட்டு
  • சினிமா
  • தொழில்நுட்பம்
+94 77 812 0744

© 2024 Eye Tamil Media Network | All Rights Reserved

பெறுபேறு கிடைக்கவில்லை
அனைத்து பெறுபேறுகளையும் பார்க்கவும்
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • விளையாட்டு
  • சினிமா
  • தொழில்நுட்பம்
  • கனடா
  • கியூபெக்
  • ஆரோக்கியம்
  • ஆன்மீகம்
  • துயர் பகிர்வு
  • இன்றைய ராசிபலன்

© 2024 Eye Tamil Media Network | All Rights Reserved

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
imunify-bot-check