“பிளாஸ்டிக் இல்லா பசுமையான எதிர்காலம் நம்மால் சாத்தியம்” எனும் தொனிப்பொருளிலான விழிப்புணர்வு மற்றும் தூய்மைப் பணிச் செயற்றிட்டம் இன்று வலிகாமம் வடக்கு – காங்கேசன்துறை பகுதியில் சிறப்பாக நடைபெற்றது.
விதையனைத்தும் விருட்சமே அமைப்பு, வலிகாமம் வடக்கு பிரதேச சபை, இலங்கை செஞ்சிலுவைச் சங்கம், காங்கேசன்துறை நடேஸ்வரா கல்லூரியின் சாரணர் இயக்கம் மற்றும் பொதுமக்கள் இணைந்து இச்செயற்றிட்டத்தை முன்னெடுத்திருந்தனர்.
சுற்றுச்சூழலை பிளாஸ்டிக் கழிவுகளிலிருந்து பாதுகாப்பதன் அவசியத்தை வலியுறுத்தியும், தூய்மையான சூழலை உருவாக்கும் நோக்கிலும் இப் பகுதியில் சேகரிக்கப்பட்ட பிளாஸ்டிக் கழிவுகள் அகற்றப்பட்டதுடன் பொதுமக்கள் மத்தியிலும் விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டது.











