நாட்டில் சீரற்ற வானிலை நிலவுவதால் ரயில் சேவை தொடர்பான முக்கிய அறிவிப்பொன்று வெளியாகியுள்ளது.
இதன்படி ரம்புக்கனை, பேராதனை மற்றும் கம்பளை ஆகிய பகுதிகளுக்கு இடையிலான ரயில் சேவைகள், எதிர்வரும் 24 மற்றும் 25 ஆம் திகதிகளில் தற்காலிகமாக நிறுத்தப்படுவதாக இலங்கை ரயில்வே திணைக்களம் அறிவித்துள்ளது.
குறிப்பாக கடிகமுவ ரயில் நிலையத்திற்கு அருகில் ஏற்பட்ட நிலச்சரிவினால், மண் மேடு ஒன்று ரயில் தண்டவாளத்தின் மீது சரிந்து விழுந்துள்ளது.
இதனையடுத்து, தண்டவாளத்தின் மீது சரிந்துள்ள மண்ணை அகற்றி, ரயில் பாதையைச் சீரமைப்பதற்காக இரண்டு நாட்களிலும் அவசரகால திருத்தப் பணிகள் முன்னெடுக்கப்படவுள்ளன.
இதேவேளை, குறித்த தினங்களில் பயணிப்பதற்காக ஏற்கனவே பயணச்சீட்டுகளை முன்பதிவு செய்துள்ள பயணிகள், எந்தவொரு ரயில் நிலையத்திலும் முழுப் பணத்தையும் மீளப் பெற்றுக்கொள்ள முடியும் என இலங்கை ரயில்வே தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.











