சமூக ஊடகப் புகழ் மற்றும் பண வருமானத்திற்காகக் குழந்தைகளைப் பயன்படுத்துவதைத் தடுக்க, நாட்டில் புதிய சட்டங்களையும் வழிகாட்டுதல்களையும் அறிமுகப்படுத்தவுள்ளதாக மகளிர் மற்றும் சிறுவர் அலுவல்கள் அமைச்சர் சரோஜா சாவித்ரி போல்ராஜ் தெரிவித்துள்ளார்.
இதன்படி குழந்தைகளை ஆபத்தான செயல்களிலும் வயதுக்கு ஒவ்வாத உள்ளடக்கங்களிலும் ஈடுபடுத்துவது குறித்த கவலைகள் அதிகரித்துள்ள நிலையில், தேசிய குழந்தைகள் பாதுகாப்பு ஆணையத்துடன் இணைந்து புதிய வழிகாட்டுதல்கள் தயாரிக்கப்பட்டு வருகின்றன.
இந்த நடவடிக்கைகள் மூலம் குழந்தைகளின் தனியுரிமை, பாதுகாப்பு மற்றும் சமூக ஊடகங்கள் மூலம் கிடைக்கும் வருமானம் ஆகியவற்றைப் பாதுகாக்க எதிர்பார்க்கப்படுவதாக அமைச்சு தெரிவித்துள்ளது.











