ஹோமாகம பொலிஸ் நிலையத்தில் விளக்கமறியலில் வைக்கப்பட்டிருந்த இஷாரா ஹர்ஷ குமார என்ற நபர் உயிரிழந்திருந்தார்.
உயிரிழந்தவரின் உடற்கூற்று பரிசோதனை அறிக்கை தற்போது வெளியாகியுள்ளது.
இந்நிலையில் இஷாரா ஹர்ஷ குமாரவின் மூளையில் இரத்த கசிவு ஏட்பட்டுள்ளதாக அவ்வறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.
குறித்த மரணம் தொடர்பில் மூன்று போலிஸ் அதிகாரிகள் சேவையிலிருந்த்து பணி இடை நீக்கம் செய்யப்பட்டுள்ளதுடன், மனித உரிமைகள் ஆணைக்குழுவில் இரண்டு உத்தியோகபூர்வ முறைப்பாடுகள் செய்யப்பட்டுள்ளது.
இந்த முறைப்பாடுகளை உயிரிழந்த நபரின் சகோதரரும், இஷாரா ஹர்ஷ குமாரவோடு கைதாகியிருந்த மற்றுமொரு நபரின் மனைவியும் இம்முறைப்பாடுகளை தாக்கல் செய்துள்ளனர்.











