நடிகர் கமல்ஹாசன் தனது அடுத்தகட்ட படப்பிடிப்புப் பணிகளைத் தொடங்கியுள்ளார். இதனை உறுதிப்படுத்தும் வகையில், நடிகர் கமல்ஹாசன் தற்போது படப்பிடிப்புப் பணிகளுக்ககாக ஹைதராபார்த் புறப்பட்ட புகைப்படங்கள் இணையத்தில் வெளியாகியுள்ளன.
நீண்டகாலமாகத் தமிழ் சினிமாவில் தனித்துவமான நடிப்பாலும், புதுமையான முயற்சிகளாலும் இரசிகர்களைக் கவர்ந்து வரும் ‘கமல்ஹாசன்’, தற்போது தனது திரைப்படப் பணிகளில் தீவிரமாக ஈடுபட்டு வருவதாகத் தெரிகிறது.
படப்பிடிப்புத் தொடர்பான இந்தப் புகைப்படம் சமூக வலைத்தளங்களில் பகிரப்பட்டு வருகிறது.
புதிய திரைப்படம் தொடர்பான அறிவிப்புகள் அல்லது படப்பிடிப்பு குறித்த கூடுதல் விபரங்களை இரசிகர்கள் ஆவலுடன் எதிர்பார்த்து வருகின்றனர்.











