ஹோமாகம பொலிஸ் காவலில் இருந்த சந்தேகநபர் ஒருவர் உயிரிழந்த சம்பவம் தொடர்பில், அப்பொலிஸ் நிலையத்தின் குற்றப்பிரிவு பொறுப்பதிகாரி கைது செய்யப்பட்டுள்ளார்.
குறித்த அதிகாரி ஏற்கனவே பணியிலிருந்து இடைநீக்கம் செய்யப்பட்டிருந்த நிலையில், மேல் மாகாண தெற்கு குற்றப் புலனாய்வுப் பிரிவினரால் கைது செய்யப்பட்டுள்ளார்.
ஹோமாகம பொலிஸ் காவலில் இருந்த இஷாரா ஹர்ஷன என்ற இளைஞர் உயிரிழந்த சம்பவம் தொடர்பிலேயே இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.
பொலிஸ் காவலில் உள்ளவர்களின் பாதுகாப்பு தொடர்பாக இந்தச் சம்பவம் பல்வேறு கேள்விகளை எழுப்பியுள்ளதுடன், சம்பவம் குறித்து சுதந்திரமான விசாரணை நடத்தப்பட வேண்டும் என எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாசவும் வலியுறுத்தியுள்ளார்.
இந்நிலையில், இளைஞரின் உயிரிழப்புக்கான சூழ்நிலைகள் குறித்து மேலதிக விசாரணைகள் தொடர்ந்து முன்னெடுக்கப்பட்டு வருகின்றன.











