இயக்குநர் ராஜ்குமார் பெரியசாமி இயக்கத்தில் உருவாகியுள்ள ‘ஓம்’ திரைப்படத்தில் நடித்துள்ள நடிகை சாய் பல்லவியின் கதாபாத்திர அறிமுக வீடியோவை படக்குழு வெளியிட்டுள்ளது.
இத்திரைப்படத்தில் தனுஷ் மற்றும் மம்மூட்டி ஆகியோர் முதன்மை பாத்திரங்களில் நடிக்கின்றனர்.
இதில் சாய் பல்லவி ‘நித்யா ரெட்டி’ என்ற ஐபிஎஸ் அதிகாரியாக நடிக்கிறார்.
செம்மரக் கடத்தலுக்கு எதிரான ஆபரேஷன் ஓம் என்ற அதிரடிப் படையை வழிநடத்தும் கம்பீரமான வனத்துறை மற்றும் சிபிஐ கூடுதல் காவல் கண்காணிப்பாளர் பாத்திரத்தில் அவர் களமிறங்கியுள்ளார்.
இப்படத்தில் தனுஷ், மம்முட்டி, சாய் பல்லவி, ஸ்ரீலீலா உள்ளிட்டோர் முக்கிய கதாப்பாத்திரங்களாக நடிக்கின்றனர்.
இப்படத்தின் கிளிம்ப்ஸ் மற்றும் பாடல்கள் வெளியாகி ரசிகர்களின் கவனத்தை ஈர்த்து வருவதுடன், இப்படம் உலகளவில் நவம்பர் 20ஆம் திகதி வெளியாகவுள்ளது.











