ஒவ்வொரு பழத்துக்கும் ஒவ்வொரு சுவையும் சத்தும் உண்டு. அந்த வகையில் தனக்குள் பல சத்துக்களைக் கொண்டுள்ள பழம் தான் சீத்தாப்பழம்.
அதன்படி சீத்தாப்பழத்தில் என்னென்ன சத்துக்கள் இருக்கிறதென பார்ப்போம்.
சீத்தாப்பழத்தில் உள்ளடங்கியிருக்கும் குளுக்கோஸ் மற்றும் பிரக்டோஸ் சர்க்கரை உடலுக்கு சக்தியை கொடுக்கிறது. சோர்வை நீக்குகிறது.
இப் பழத்தில் விட்டமின் சி அதிகமாக இருப்பதால் சளி, காய்ச்சல் போன்ற தொந்தரவுகள் வராமல் தடுக்கும்.
நார்ச்சத்து அதிகம் இருப்பதால் மலச்சிக்கல் பிரச்சினை இருக்காது. செரிமானத்துக்கும் உதவும்.
பொட்டாசியம், மக்னீசியம் போன்றவை இருப்பதால் இரத்த அழுத்தத்தைக் கட்டுக்குள் வைத்து இதய ஆரோக்கியத்தை பாதுகாக்கும்.
நரம்புகளுக்கு ஓய்வு கொடுத்து, மன அழுத்தத்தைக் குறைக்கும்.
இதில் இருக்கும் கல்சியம் மற்றும் பொஸ்பரஸ் எலும்புகளுக்கும் பற்களுக்கும் மிகவும் நல்லது.
இதில் இருக்கும் இரும்புச்சத்து இரத்த சிவப்பணுக்களை அதிகரிக்கச் செய்யும். இரத்த சோகை வராமல் தடுக்க உதவும்.
மேலும் விட்டமின் ஏ மற்றும் ரிபோஃப்ளேவின் போன்ற சத்துக்கள் சீத்தாப்பழத்தில் இருப்பதால் கண் பார்வை சம்பந்தப்பட்ட பிரச்சினைகள் வராது.
உடலுக்கான சத்துக்களை கொடுப்பதோடு நின்றுவிடாமல் சருமத்தையும் இளமையாக வைத்திருக்க உதவும்.











