EyeTamil News
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • விளையாட்டு
  • சினிமா
  • தொழில்நுட்பம்
Watch Live
பெறுபேறு கிடைக்கவில்லை
அனைத்து பெறுபேறுகளையும் பார்க்கவும்
  • கனடா
  • கியூபெக்
  • ஆரோக்கியம்
  • ஆன்மீகம்
  • துயர் பகிர்வு
  • இன்றைய ராசிபலன்
  • எம்மவர் நிகழ்வுகள்
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • விளையாட்டு
  • சினிமா
  • தொழில்நுட்பம்
பெறுபேறு கிடைக்கவில்லை
அனைத்து பெறுபேறுகளையும் பார்க்கவும்
EyeTamil News
Watch Live
முகப்பு கனடா
கனடாவை குறிக்க ‘இணை உறுப்பினர்’ சொல் நீக்கம்:  ஐரோப்பிய ஒன்றியம்

கனடாவை குறிக்க ‘இணை உறுப்பினர்’ சொல் நீக்கம்: ஐரோப்பிய ஒன்றியம்

ஐப்பசி 29, 2026
வகை: கனடா
வாசிக்கும் நேரம்: 1 நிமிடம்
A A
Share on FacebookShare on Twitter

கனடாவை ஐரோப்பிய ஒன்றியத்தின் (EU) “இணை உறுப்பினராக” (associate member) மாற்றும் திட்டத்தை ஐரோப்பிய ஒன்றியம் கைவிட்டுள்ளதாகத் தகவல்கள் வெளியாகியுள்ளன.

அதற்குப் பதிலாக இருதரப்பு உறவுகளை மேலும் வலுப்படுத்துவது தொடர்பான புதிய சொற்றொடர்கள் கூட்டு அறிக்கையில் பயன்படுத்தப்படவுள்ளன.

மொன்றியலில் எதிர்வரும் வெள்ளிக்கிழமை நடைபெறவுள்ள 21 ஆவது கனடா – ஐரோப்பிய ஒன்றிய உச்சிமாநாட்டின் போது, இது குறித்த உத்தியோகபூர்வ கூட்டு அறிக்கை வெளியிடப்படவுள்ளது.

இந்த அறிக்கையின் வரைவுப் பிரதியை மேற்கோள்காட்டி வெளிவந்துள்ள தகவல்களின்படி, கனடாவைக் குறிப்பதற்கு “இணை உறுப்பினர்” என்ற சொல் நீக்கப்பட்டு, அதற்குப் பதிலாக ‘மிக நெருக்கமான பிணைப்பு’ (ever closer association) என்ற சொற்றொடர் சேர்க்கப்பட்டுள்ளதாகத் தெரிகிறது.

கடந்த மாதம் ஐரோப்பிய ஆணையத்தின் தலைவர் உர்சுலா வொன் டெர் லேயன் (Ursula von der Leyen), கனடாவை ஐரோப்பிய ஒன்றியத்தின் முதலாவது “இணை உறுப்பினராக” மாற்றுவதற்கான நடவடிக்கைகள் தொடங்கப்படும் என அறிவித்திருந்தார்.

ஐரோப்பிய ஒன்றியத்தின் விதிமுறைகளில் இதுவரை இல்லாத இத்தகைய புதிய அந்தஸ்து குறித்துப் பல உறுப்பு நாடுகளும் அரசியல்வாதிகளும் கேள்விகளை எழுப்பியிருந்தனர்.

குறிப்பாக, ஜெர்மனி உள்ளிட்ட சில ஐரோப்பிய ஒன்றிய நாடுகள் “இணை உறுப்பினர்” என்ற பதத்தைப் பயன்படுத்துவதற்குத் தீவிர எதிர்ப்பைத் தெரிவித்திருந்ததாகக் கூறப்படுகிறது.

இதன் காரணமாகவே தற்போதைய வரைவு அறிக்கையில் மாற்றம் செய்யப்பட்டுள்ளதாகத் தகவல்கள் தெரிவிக்கின்றன.

இருப்பினும், உச்சிமாநாடு நிறைவடையும் வரை இந்த வரைவு அறிக்கையில் மேலும் மாற்றங்கள் ஏற்பட வாய்ப்புள்ளதாகவும் கூறப்படுகிறது.

இந்த விவகாரம் குறித்துக் கருத்துத் தெரிவித்துள்ள பிரதமர் மார்க் கார்னி (Mark Carney), ‘இருதரப்பு உறவின் பெயரோ அல்லது சொற்றொடர்களோ முக்கியமல்ல, இதனால் கனடா மக்களுக்குக் கிடைக்கும் நன்மைகளே முதன்மையானவை’ என்று குறிப்பிட்டுள்ளார்.

மேலும், கனடா அதிக சுதந்திரமும் இறையாண்மையும் கொண்ட நாடாக மாறுவதற்கும், மக்கள் தங்களின் விருப்பப்படி வாழ்வதற்கும் இந்த உறவுமுறை எந்தளவுக்குப் பங்களிக்கிறது என்பதே முக்கியமானது என்றும் பிரதமர் கார்னி சுட்டிக்காட்டியுள்ளார்.

தொடர்புடைய செய்திகள்

கூடுதல் குப்பைக் கிடங்குகளை உருவாக்க ஒன்ராறியோ அரசு திட்டம்!
கனடா

கூடுதல் குப்பைக் கிடங்குகளை உருவாக்க ஒன்ராறியோ அரசு திட்டம்!

ஐப்பசி 29, 2026
அமெரிக்காவுடன் இப்போதைக்கு வர்த்தக ஒப்பந்தம் இல்லை –  மார்க் கார்னி
கனடா

அமெரிக்காவுடன் இப்போதைக்கு வர்த்தக ஒப்பந்தம் இல்லை – மார்க் கார்னி

ஐப்பசி 29, 2026
வட்டி வீதத்தை அதிகரித்த கனடா மத்திய வங்கி!
கனடா

வட்டி வீதத்தை அதிகரித்த கனடா மத்திய வங்கி!

ஐப்பசி 29, 2026
டொராண்டோவில் வேமோ ஓட்டுநரில்லா டேக்சி சேவை – ஓட்டுநர்கள் வேலை இழக்கும் அச்சம்
கனடா

டொராண்டோவில் வேமோ ஓட்டுநரில்லா டேக்சி சேவை – ஓட்டுநர்கள் வேலை இழக்கும் அச்சம்

ஐப்பசி 28, 2026
ஒன்ராறியோவில் 8 பிராந்தியத் தலைவர்களை நியமிக்க டக் ஃபோர்ட் அரசு திட்டம்
கனடா

ஒன்ராறியோவில் 8 பிராந்தியத் தலைவர்களை நியமிக்க டக் ஃபோர்ட் அரசு திட்டம்

ஐப்பசி 28, 2026
ஒஷாவா நகர மையப் பகுதியில் வீடமைப்புக்கு முன்னுரிமை – புதிய கவுன்சிலர்கள் உறுதி
கனடா

ஒஷாவா நகர மையப் பகுதியில் வீடமைப்புக்கு முன்னுரிமை – புதிய கவுன்சிலர்கள் உறுதி

ஐப்பசி 28, 2026
# # #
விளம்பரம்

வாராந்திர செய்திகள்

இன்றைய செய்திகள்
வியாழன்புதன்செவ்வாய்திங்கள்ஞாயிறுசனி

சிறப்புச் செய்திகள்

ஹோமாகம பொலிஸ் காவல் மரணம் – குற்றப்பிரிவு பொறுப்பதிகாரி கைது

ஹோமாகம பொலிஸ் காவல் மரணம் – குற்றப்பிரிவு பொறுப்பதிகாரி கைது

1 நாள் முன்னர்
கிளிநொச்சியில் குப்பைகளைக் கொட்டுவோருக்கு 10 இலட்சம் ரூபாய் வரை அபராதம்!

கிளிநொச்சியில் குப்பைகளைக் கொட்டுவோருக்கு 10 இலட்சம் ரூபாய் வரை அபராதம்!

5 நாட்கள் முன்னர்
வடமராட்சிக் கிழக்கில் சிறப்பு அதிரடிப்படையினரின் முகாம் திடீர் அகற்றம்

வடமராட்சிக் கிழக்கில் சிறப்பு அதிரடிப்படையினரின் முகாம் திடீர் அகற்றம்

1 நாள் முன்னர்
இலங்கை மாணவர்களுக்கு தென் கொரியாவில் உயர்கல்வி வாய்ப்பு

இலங்கை மாணவர்களுக்கு தென் கொரியாவில் உயர்கல்வி வாய்ப்பு

2 நாட்கள் முன்னர்
யாழ் நகரைத் திட்டமிட்ட முறையில் மறுசீரமைக்க வேண்டும் – பேராசிரியர் வலியுறுத்தல்

யாழ் நகரைத் திட்டமிட்ட முறையில் மறுசீரமைக்க வேண்டும் – பேராசிரியர் வலியுறுத்தல்

2 நாட்கள் முன்னர்

எம்மவர் நிகழ்வுகள்

மன்னிக்கவும், நிகழ்வுகள் எதுவும் இல்லை!
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • விளையாட்டு
  • சினிமா
  • தொழில்நுட்பம்
+94 77 812 0744

© 2024 Eye Tamil Media Network | All Rights Reserved

பெறுபேறு கிடைக்கவில்லை
அனைத்து பெறுபேறுகளையும் பார்க்கவும்
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • விளையாட்டு
  • சினிமா
  • தொழில்நுட்பம்
  • கனடா
  • கியூபெக்
  • ஆரோக்கியம்
  • ஆன்மீகம்
  • துயர் பகிர்வு
  • இன்றைய ராசிபலன்

© 2024 Eye Tamil Media Network | All Rights Reserved

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
imunify-bot-check