சாட்டோகுவே நகரில் 55 வயதுக்கு மேற்பட்ட ஆங்கிலம் பேசும் மக்களுக்குச் சேவையாற்றி வந்த Centre 55 Plus de Châteauguay என்ற மூத்த குடிமக்கள் மையம் திடீரென மூடப்பட்டுள்ளது.
கட்டிடத்தின் பாதுகாப்பு தொடர்பாக மேற்கொள்ளப்பட்ட ஆய்வுகளில் குறிப்பிடத்தக்க கட்டமைப்புச் சிக்கல்கள் கண்டறியப்பட்டதைத் தொடர்ந்து, நகர நிர்வாகம் இந்த நடவடிக்கையை எடுத்துள்ளது.
750-க்கும் மேற்பட்ட உறுப்பினர்களைக் கொண்ட இந்த மையம், குறைந்தது மூன்று மாதங்களுக்கு மூடப்பட்டிருக்கும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதனால் மூத்த குடிமக்களுக்கான வழக்கமான சமூக மற்றும் கலாச்சார நிகழ்வுகளும் பாதிக்கப்பட்டுள்ளன. மாற்று இடமொன்றைத் தேடும் நடவடிக்கையில் நிர்வாகம் ஈடுபட்டுள்ளது.
இதேவேளை, அருகிலுள்ள மற்றொரு நகராட்சி கட்டிடத்திலும் பாதுகாப்புப் பிரச்சினைகள் கண்டறியப்பட்டுள்ளன. அந்தக் கட்டிடத்தை இடிக்க வேண்டியுள்ளதாக நகர நிர்வாகம் தெரிவித்துள்ளது.
இரண்டு கட்டிடங்களின் எதிர்காலம் தொடர்பாகவும் விரிவான ஆய்வுகளை மேற்கொண்டு வருவதாக சாட்டோகுவே மேயர் எரிக் அலார்ட் தெரிவித்துள்ளார்.











