அமெரிக்க இடைக்காலத் தேர்தலில் ரிபப்ளிகன் கட்சி நாடாளுமன்றக் கட்டுப்பாட்டை இழந்த நிலையில், இந்தத் தோல்விக்கு ஈரான் மீது தொடுக்கப்பட்ட போரே முக்கிய காரணம் என துணை அதிபர் ஜே.டி. வேன்ஸ் தெரிவித்துள்ளார்.
தேர்தல் முடிவுகள் குறித்து சமூக வலைத்தளத்தில் பதிவிட்டுள்ள அவர், ஈரான் போரை விரைவாக முடிவுக்குக் கொண்டுவர வேண்டும் என வலியுறுத்தியுள்ளார்.
அத்துடன், மக்களின் வாழ்வாதாரச் செலவுகள், அமெரிக்காவின் வெளியுறவுக் கொள்கைகள் மற்றும் இஸ்ரேலுடனான உறவை மறுபரிசீலனை செய்வதில் ரிபப்ளிகன் கட்சி கவனம் செலுத்த வேண்டும் என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
இடைக்காலத் தேர்தல் பிரச்சாரத்தின் போது, அதிபர் டொனால்ட் டிரம்பைக் குறிப்பிடுவதைக் குறைத்து, தனது சொந்த அரசியல் முன்னுரிமைகளான பொருளாதாரத் தேசியம் மற்றும் பொதுப் பாதுகாப்பு தொடர்பான விடயங்களையே வேன்ஸ் அதிகமாகப் பேசினார்.
டிரம்பின் மீதான அதிருப்தி ரிபப்ளிகன் வேட்பாளர்களைப் பாதித்ததால், வேன்ஸ் இந்த உத்தியைக் கையாண்டதாகத் தெரிவிக்கப்படுகிறது.
ஈரான் போரினால் எரிபொருள் விலை உயர்ந்ததே தோல்விக்குக் காரணம் என டொனால்ட் டிரம்ப் ஒப்புக்கொண்ட போதிலும், தனது முடிவில் மாற்றமில்லை எனத் தெரிவித்துள்ளார்.
எனினும், துணை அதிபர் வேன்ஸ் வெளியிட்டுள்ள அறிக்கை, 2028ஆம் ஆண்டு நடைபெறவுள்ள அதிபர் தேர்தலுக்கான ரிபப்ளிகன் கட்சியின் அரசியல் பாதையில் புதிய விவாதத்தை தோற்றுவித்துள்ளது.
வேன்ஸ் 2028 அதிபர் தேர்தலில் போட்டியிடுவது குறித்து இன்னும் அதிகாரப்பூர்வமாக அறிவிக்கவில்லை என்றாலும், ரிபப்ளிகன் கட்சியின் முக்கிய எதிர்காலத் தலைவர்களில் ஒருவராக அவர் பார்க்கப்படுகிறார்.











