அமெரிக்காவிற்கான ரஷ்யத் தூதுவர் அலெக்சாண்டர் தார்ச்சீவ் (Alexander Darchiev) உயிரிழந்துள்ளதாக ரஷ்ய வெளிவிவகார அமைச்சு அறிவித்துள்ளது.
அமெரிக்காவிற்கான ரஷ்யத் தூதுவர் திடீரென மரணமடைந்ததாக ரஷ்ய வெளிவிவகார அமைச்சு வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ள நிலையில், மரணத்திற்கான காரணம் அல்லது கூடுதல் விபரங்கள் எவையும் உடனடியாக வெளியிடப்படவில்லை.
அமெரிக்காவிற்கான ரஷ்யத் தூதுவராக, அலெக்சாண்டர் தார்ச்சீவ் கடந்த ஆண்டு மார்ச் மாதம் நியமிக்கப்பட்டிருந்தார்.
அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் மீண்டும் ஆட்சிக்கு வந்ததைத் தொடர்ந்து மற்றும் உக்ரைன் மீதான ரஷ்யாவின் முழு அளவிலான போர் நடவடிக்கைகளுக்குச் சில ஆண்டுகளுக்குப் பிறகு அவர் இப்பதவிக்கு நியமிக்கப்பட்டிருந்தார்.
உக்ரைன் மீதான ரஷ்யாவின் தாக்குதலை அவர் ஒரு “தேவையான நடவடிக்கை” என இதற்கு முன்னர் வெளிப்படையாக நியாயப்படுத்தியிருந்தார்.
ரஷ்ய வெளியுறவுக் கொள்கையின் மிக முக்கியமான துறைகளில் ஒன்றான அமெரிக்கா – ரஷ்யா இடையேயான உறவுகள் மற்றும் விவகாரங்களில் அலெக்சாண்டர் தார்ச்சீவ் நீண்டகாலமாக நிபுணத்துவம் பெற்றுப் பணியாற்றியவர் எனவும் ரஷ்ய வெளிவிவகார அமைச்சு குறிப்பிட்டுள்ளது.











