இலங்கை போக்குவரத்து சபை பேருந்துகளில் பெண்கள் மற்றும் சிறுமிகளுக்கு எதிரான வன்முறையைத் தடுப்பது குறித்த விழிப்புணர்வை ஏற்படுத்துவதற்கான துண்டுப்பிரசுரங்களை பேருந்துகளில் ஒட்டும் நடவடிக்கை இலங்கை போக்குவரத்து சபையின் தலைவர் சஜீவ நந்தன கனகரத்ன (Sajeewa Nandana Kanakarathna) தலைமையில் கிளிநொச்சி பேருந்து நிலையத்தில் இன்று இடம்பெற்றது.
இந்த செயற்றிட்டத்தின் மூலம் பெண்கள் மற்றும் சிறுவர்களுக்கு பேருந்தில் ஏற்படும் துன்புறுத்தல்களை நேரடியாக தெரிவிக்க முடியும் என கூறப்பட்டுள்ளது.











