‘கோந்தல்’ (Gondhal) எனும் மராட்டிய திரைப்படத்திற்காக இசையமைப்பதற்குக் கலாச்சாரப் பாரம்பரியங்களை நேரில் அறிந்து கொள்ளும் நோக்கில், பிரபல இசையமைப்பாளர் இளையராஜா நாசிக் கிராமத்திற்குப் பயணம் மேற்கொண்டுள்ளார்.
83 வயதான இசைஞானி இளையராஜா, இப்படத்தின் பின்னணி இசையை மேலும் மெருகூட்டும் வகையில் சென்னைப் பட்டணத்திலிருந்து நாசிக்கில் உள்ள கிராமத்திற்குச் சென்றுள்ளார்.
அங்குள்ள பாரம்பரிய முறைமைகள் மற்றும் கலாச்சாரப் பின்னணியை நேரில் பார்த்துப் புரிந்துகொண்ட பின்னரே அவர் இசையமைக்கவுள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
மராட்டிய மாநிலத்தின் பாரம்பரிய மரபுகளைப் பிரதிபலிக்கும் வகையில் உருவாக்கப்பட்டு வரும் இத்திரைப்படத்திற்குரிய இசையைத் துல்லியமாகவும், தத்ரூபமாகவும் வழங்குவதற்காக இளையராஜா இந்தச் சிறப்புப் பயணத்தை மேற்கொண்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.











