நடிகர் விக்ரம் பிரபு கதாநாயகனாக நடிக்கும் ‘சிட்டி ஆஃப் கோல்டு’ திரைப்படத்தின் படப்பிடிப்பு முழுமையாக நிறைவடைந்துள்ளதாக படக்குழு அறிவித்துள்ளது.
இதனை உறுதிப்படுத்தும் வகையில், படப்பிடிப்பு நிறைவடைந்ததைக் காட்டும் காணொளியையும் படக்குழுவினர் வெளியிட்டுள்ளனர்.
அறிமுக இயக்குநர் சித்தார்த் எழுதி இயக்கும் இந்தத் திரைப்படத்திற்கு, இசையமைப்பாளர் யுவன் சங்கர் ராஜா இசையமைக்கிறார்.
தங்கக் கடத்தலை மையமாகக் கொண்டு உருவாகும் இந்தத் திரைப்படம், அதிரடி மற்றும் பரபரப்பான திருப்பங்கள் நிறைந்த ஆக்ஷன் திரில்லர் படமாக உருவாகியுள்ளது.
விக்ரம் பிரபுவுடன் இணைந்து சமூக வலைத்தளங்களில் பிரபலமான அமலா சாஜி மற்றும் நடிகை சிவாத்மிகா ராஜசேகர் ஆகியோரும் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர்.
ரோமியோ பிக்சர்ஸ் நிறுவனம் தயாரித்துள்ள இந்தத் திரைப்படம், எதிர்வரும் 2027ஆம் ஆண்டு திரையரங்குகளில் வெளியாகவுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
படப்பிடிப்பு நிறைவடைந்துள்ள நிலையில், படத்தின் அடுத்தகட்டப் பணிகள் மற்றும் வெளியீடு தொடர்பான எதிர்பார்ப்புகள் ரசிகர்கள் மத்தியில் அதிகரித்துள்ளன.











