இயக்குநரும் நடிகருமான கே.பி ஜெகன் கதையின் நாயகனாக நடித்திருக்கும் ‘ஜெயில் மேட்ஸ்’ திரைப்படத்தில், மறைந்த ‘தேனிசைத் தென்றல்’ தேவாவின் குரலில் பதிவு செய்யப்பட்ட கடைசிப் பாடலான ‘வா சிவா’ எனும் பாடலும், அதற்கான பிரத்யேக காணொளியும் வெளியிடப்பட்டுள்ளன.
கே.பி ஜெகன் இயக்கத்தில் உருவாகியுள்ள இத்திரைப்படத்தில் அவருடன் விஜய் வர்மா, எம்.எஸ். பாஸ்கர், சனாஷ்கா ஸ்ரீ, மௌனிகா சந்தோஷ், அருள்தாஸ், வெற்றிவேல் ராஜா, ‘உறியடி’ சங்கர், சாய் அபிநயா, வீரசமர், கதிரவன் பாலு, திண்டுக்கல் அலெக்ஸ், இயக்குநர் மூர்த்தி உள்ளிட்ட பலர் நடித்துள்ளனர்.
சுக. செல்வம் ஒளிப்பதிவு செய்துள்ள இப்படத்திற்கு ஸ்ரீகாந்த் தேவா இசையமைத்துள்ளார். மணிகண்டன் சிவக்குமார் படத்தொகுப்புப் பணிகளையும், வீரசமர் கலை இயக்கத்தையும் கவனித்துள்ளனர்.
தென்னிந்தியாவின் முதல் மெட்டா சினிமாவாகத் தயாராகியுள்ள இத்திரைப்படத்தை யுனைடெட் ஆர்ட்ஸ் நிறுவனம் தயாரித்துள்ளதுடன், பசங்க புரொடக்ஷன்ஸ் மற்றும் ரவுடி பிக்சர்ஸ் ஆகிய நிறுவனங்கள் இணைந்து வழங்குகின்றன. இப்படத்தின் ஆடியோவை வேல்ஸ் மியூசிக் இன்டர்நேஷனல் நிறுவனம் வெளியிடுகிறது.
இப்படத்தின் அறிமுகக் காணொளி வெளியாகி மில்லியன் கணக்கிலான டிஜிட்டல் பார்வைகளைப் பெற்றுள்ள நிலையில், ‘எங்கெங்கோ தேடிப் போனேன்…’ எனத் தொடங்கும் முதல் பாடல் தற்போது வெளியிடப்பட்டுள்ளது. அறிமுகப் பாடலாசிரியர் சக்தி உமா பாலகிருஷ்ணா எழுதியுள்ள இப்பாடலை மறைந்த தேவா பாடியுள்ளார்.
மறைவதற்கு முன்னர் தேவாவின் குரலில் பதிவான கடைசிப் பாடல் இது என்பதே இப்பாடலின் சிறப்பம்சமாகும். சிவபெருமானிடம் பக்தன் ஒருவன் மனம் வருந்திப் பாடும் விதமாகவும், தேவாவின் குரலில் ஆன்மிக உணர்வு மேலோங்கியும் அமைந்துள்ள இப்பாடல் இசை ரசிகர்களைக் கடந்து ஆன்மிக ரசிகர்களையும் வெகுவாகக் கவர்ந்துள்ளது.











