நடிகர் சதீஷ் மற்றும் தெலுங்கு நடிகர் ஆதி சாய்குமார் இணைந்து நடிக்கும் ‘பத்து நாள் ராஜா’ திரைப்படத்தின் டீசர் வெளியாகியுள்ளது.
‘கூகுள் குட்டப்பா’ திரைப்படத்தின் இயக்குநர் குரு சரவணன் எழுதி இயக்கும் இந்தத் திரைப்படம், மொபைல் செயலிகள் ஊடாகக் கடன் பெறுவதையும், அதனுடன் தொடர்புடைய பிரச்சினைகளையும் மையமாகக் கொண்டு உருவாகியுள்ளது.
வெளியாகியுள்ள டீசரில், மொபைல் கடன் செயலிகளைப் பயன்படுத்துவதால் ஏற்படக்கூடிய சிக்கல்கள் தொடர்பான கதைக்களம் இடம்பெற்றுள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
எஸ்.ஜி.எஸ். புரொடக்ஷன்ஸ் நிறுவனம் சார்பில் சுரேஷ் தயாரிக்கும் இப்படத்திற்கு இசையமைப்பாளர் ஜிப்ரான் இசையமைக்கிறார்.
மேலும், ஆடுகளம் நரேஷ், சரவணன் மற்றும் கருடா ராம் உள்ளிட்டோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர்.
சமூகத்தில் தற்போது அதிகரித்து வரும் மொபைல் கடன் செயலிகள் தொடர்பான பிரச்சினைகளை மையமாகக் கொண்டு உருவாகியுள்ள இந்தத் திரைப்படம் விரைவில் திரையரங்குகளில் வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.
இந்நிலையில், படத்தின் டீசர் வெளியாகியுள்ளதைத் தொடர்ந்து ரசிகர்கள் மத்தியில் எதிர்பார்ப்பு அதிகரித்துள்ளது.











