யாழ்ப்பாணத்தின் பல பாகங்களிலும் இன்றைய தினம் திங்கட்கிழமை காலை திடீரென மழை பொழிந்தமையால் சில மணி நேரம் மக்களின் இயல்வு வாழ்க்கை பாதிக்கப்பட்டுள்ளது.
வீதிகளில் அதிக வெள்ளம் ஓடியமையால் வாகன சாரதிகள் சிரமங்களை எதிர்கொள்ள நேரிட்டது.
அதேவேளை இன்றைய தினம் ஆரம்பித்துள்ள மழையுடனான காலநிலை எதிர்வரும் நான்கு நாட்களுக்கு தொடரும் எனவும், இந்த நான்கு நாட்களும் திரட்டிய மழைவீழ்ச்சியாக 100 மி.மீ. மழை வீழ்ச்சி கிடைக்கும் வாய்ப்புள்ளது எனவும் யாழ்ப்பாண பல்கலைக்கழக கலைப்பீடாதிபதியும், புவியியல் பேராசிரியருமான கலாநிதி நாகமுத்து பிரதீபராஜா தெரிவித்துள்ளார்.











