EyeTamil News
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • விளையாட்டு
  • சினிமா
  • தொழில்நுட்பம்
Watch Live
பெறுபேறு கிடைக்கவில்லை
அனைத்து பெறுபேறுகளையும் பார்க்கவும்
  • கனடா
  • கியூபெக்
  • ஆரோக்கியம்
  • ஆன்மீகம்
  • துயர் பகிர்வு
  • இன்றைய ராசிபலன்
  • எம்மவர் நிகழ்வுகள்
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • விளையாட்டு
  • சினிமா
  • தொழில்நுட்பம்
பெறுபேறு கிடைக்கவில்லை
அனைத்து பெறுபேறுகளையும் பார்க்கவும்
EyeTamil News
Watch Live
முகப்பு அண்மைய செய்திகள்
ஜம்மு – காஷ்மீர் தாக்குதல் – மோடி கண்டனம்

ஜம்மு – காஷ்மீர் தாக்குதல் – மோடி கண்டனம்

சித்திரை 24, 2025
வகை: அண்மைய செய்திகள், உலகம்
A A
Share on FacebookShare on Twitter

பஹல்காமில் தாக்குதல் நடத்திய தீவிரவாதிகள் கற்பனை செய்ய முடியாத அளவுக்கு தண்டனையைப் பெறுவார்கள் என இந்திய பிரதமர் நரேந்திர மோடி பேசியுள்ளார்.

ஜம்மு – காஷ்மீரின் பஹல்காமில் உள்ள பைசாரன் பள்ளத்தாக்கு பகுதியில் நேற்று முன்தினம் (22) தீவிரவாதிகள் நடத்திய கொடூரத் தாக்குதலில் 2 வெளிநாட்டவர் உள்பட 26 பேர் கொல்லப்பட்டனர். மேலும் சிலர் காயங்களுடன் வைத்தியசாலையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

இந்நிலையில் பிகார் மாநிலம் மதுபானி பகுதியில் நிகழ்ச்சி ஒன்றில் கலந்துகொண்டு பேசிய இந்திய பிரதமர் மோடி, பஹல்காமில் தாக்குதல் நடத்திய தீவிரவாதிகள் நிச்சயம் தண்டிக்கப்படுவார்கள் என்று கூறியுள்ளார்.

“இன்று பிகார் மண்ணில் இருந்து உலகத்திற்கே ஒன்று கூறுகிறேன். ஒவ்வொரு தீவிரவாதியையும் அவர்களை ஆதரிப்பவர்களையும் இந்தியா அடையாளம் கண்டு கண்டுபிடித்துத் தண்டிக்கும். பூமியின் எல்லைகள் வரை அவர்களை துரத்திப் பிடிப்போம்.

தீவிரவாதத்தால் இந்தியாவின் உணர்வு ஒருபோதும் உடைபடாது. தீவிரவாதம் தண்டிக்கப்படாமல் இருக்காது.

நீதி நிலைநாட்டப்படுவதை உறுதி செய்ய அனைத்து முயற்சிகளும் மேற்கொள்ளப்படும். இந்தத் தீர்மானத்தில் முழு தேசமும் ஒன்றுபட்டுள்ளது. மனிதநேயத்தில் நம்பிக்கை கொண்ட அனைவரும் நம்முடன் இருக்கின்றனர். பல்வேறு நாடுகளின் மக்களுக்கும் தலைவர்களுக்கும் நன்றி கூறுகிறேன்.

இந்த தீவிரவாதத் தாக்குதலால் ஒட்டுமொத்த தேசமும் வருத்தத்தில் உள்ளது. இந்த தாக்குதலுக்குக் காரணமான தீவிரவாதிகளும், இந்த சதியில் ஈடுபட்டவர்களும் அவர்கள் கற்பனை செய்ய முடியாத அளவுக்கு பெரிய தண்டனையைப் பெறுவார்கள் என்பதை நான் மிகத் தெளிவாகச் சொல்லிக்கொள்கிறேன்.

140 கோடி இந்தியர்களின் மன உறுதி தீவிரவாதத்தை இருந்தஇடம் தெரியாமல் ஆக்கும் ” என்று பேசியுள்ளார்.

தொடர்புடைய செய்திகள்

ஐரோப்பிய நாடுகளில் கடும்  வெப்பம்
உலகம்

ஐரோப்பிய நாடுகளில் கடும் வெப்பம்

ஆனி 23, 2026
மன்னாரில் சுகாதார சீர்கேட்டுடன் இயங்கிய வடை தயாரிப்பு நிலையம் மூடல்
அண்மைய செய்திகள்

மன்னாரில் சுகாதார சீர்கேட்டுடன் இயங்கிய வடை தயாரிப்பு நிலையம் மூடல்

ஆனி 23, 2026
யாழ். சர்வதேச விமான நிலையத்தில் நடராஜர் சிலையை பிரதிஷ்டை செய்யுங்கள் – சீ.வி.கே சிவஞானம்
அண்மைய செய்திகள்

யாழ். சர்வதேச விமான நிலையத்தில் நடராஜர் சிலையை பிரதிஷ்டை செய்யுங்கள் – சீ.வி.கே சிவஞானம்

ஆனி 23, 2026
பருத்தித்துறை வெளிச்ச வீட்டு பகுதியை இராணுவத்திடமிருந்து விடுவிக்க நடவடிக்கை
அண்மைய செய்திகள்

பருத்தித்துறை வெளிச்ச வீட்டு பகுதியை இராணுவத்திடமிருந்து விடுவிக்க நடவடிக்கை

ஆனி 23, 2026
கிளிநொச்சியில்  மீண்டும் கரும்பு செய்கை ஆரம்பம்
அண்மைய செய்திகள்

கிளிநொச்சியில் மீண்டும் கரும்பு செய்கை ஆரம்பம்

ஆனி 23, 2026
யாழில். சட்டத்தரணிகளை சந்தித்த நீதி அமைச்சர்
அண்மைய செய்திகள்

யாழில். சட்டத்தரணிகளை சந்தித்த நீதி அமைச்சர்

ஆனி 23, 2026
# # #
விளம்பரம்

வாராந்திர செய்திகள்

இன்றைய செய்திகள்
செவ்வாய்திங்கள்ஞாயிறுசனிவெள்ளிவியாழன்

சிறப்புச் செய்திகள்

வெங்கலச் செட்டிகுளம் பிரதேச செயலாளருக்கு பணித்தடை!

வெங்கலச் செட்டிகுளம் பிரதேச செயலாளருக்கு பணித்தடை!

5 நாட்கள் முன்னர்
வடக்கில் வருட இறுதி மழைக்கு முன் அபிவிருத்திகளை திட்டங்களை நிறைவு செய்ய பணிப்பு

வடக்கில் வருட இறுதி மழைக்கு முன் அபிவிருத்திகளை திட்டங்களை நிறைவு செய்ய பணிப்பு

6 நாட்கள் முன்னர்
யாழ்.தந்தை செல்வா கலையரங்கில் வட்டுக்கோட்டை 50 எழுச்சி மாநாடு

யாழ்.தந்தை செல்வா கலையரங்கில் வட்டுக்கோட்டை 50 எழுச்சி மாநாடு

3 நாட்கள் முன்னர்
செம்மணி புதைகுழி தொடர்பில் நீதி நிலை நாட்டப்படும் – நீதி அமைச்சர் உறுதி

செம்மணி புதைகுழி தொடர்பில் நீதி நிலை நாட்டப்படும் – நீதி அமைச்சர் உறுதி

4 நாட்கள் முன்னர்
கனடா பக்கம் பாதையை மாற்றியுள்ள போதைப்பொருள் கடத்தல் கும்பல்கள் – அமெரிக்க உள்நாட்டு பாதுகாப்புத்துறைச் செயலர் எச்சரிக்கை

கனடா பக்கம் பாதையை மாற்றியுள்ள போதைப்பொருள் கடத்தல் கும்பல்கள் – அமெரிக்க உள்நாட்டு பாதுகாப்புத்துறைச் செயலர் எச்சரிக்கை

6 நாட்கள் முன்னர்

எம்மவர் நிகழ்வுகள்

மன்னிக்கவும், நிகழ்வுகள் எதுவும் இல்லை!
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • விளையாட்டு
  • சினிமா
  • தொழில்நுட்பம்
+1 514-800-2610

© 2024 Eye Tamil Media Network | All Rights Reserved

பெறுபேறு கிடைக்கவில்லை
அனைத்து பெறுபேறுகளையும் பார்க்கவும்
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • விளையாட்டு
  • சினிமா
  • தொழில்நுட்பம்
  • கனடா
  • கியூபெக்
  • ஆரோக்கியம்
  • ஆன்மீகம்
  • துயர் பகிர்வு
  • இன்றைய ராசிபலன்

© 2024 Eye Tamil Media Network | All Rights Reserved

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In