அம்பலாங்கொடை இடம்தோட்ட பகுதியில் போதைப்பொருட்களுடன் 75 இளைஞர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர்.
இதன்படி நேற்று (6) இரவு சமூக ஊடகங்கள் ஊடாக ஏட்பாடு செய்யப்பட்டிருந்த விருந்து உபசாரத்தில் முன்னெடுக்கப்பட்ட அதிரடி சோதனை நடவடிக்கையிலேயே குறித்த இளைஞர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர்.
கைதானவர்களிடமிருந்து கஞ்சா, ஐஸ், ஹெரோயின் மற்றும் ஹசிஷ் ஆகிய போதைப்பொருட்கள் கைப்பற்றப்பட்டுள்ளதுடன், கைதானவர்களை பலபிட்டிய நீதவான் நீதிமன்றில் முற்படுத்த பொலிஸார் நடவடிக்கை எடுத்துள்ளனர்.











