EyeTamil News
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • விளையாட்டு
  • சினிமா
  • தொழில்நுட்பம்
Watch Live
பெறுபேறு கிடைக்கவில்லை
அனைத்து பெறுபேறுகளையும் பார்க்கவும்
  • கனடா
  • கியூபெக்
  • ஆரோக்கியம்
  • ஆன்மீகம்
  • துயர் பகிர்வு
  • இன்றைய ராசிபலன்
  • எம்மவர் நிகழ்வுகள்
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • விளையாட்டு
  • சினிமா
  • தொழில்நுட்பம்
பெறுபேறு கிடைக்கவில்லை
அனைத்து பெறுபேறுகளையும் பார்க்கவும்
EyeTamil News
Watch Live
முகப்பு கியூபெக்
கடும் நெருக்கடியைச் சந்தித்துள்ள மொன்றியலின்  முக்கிய மூன்று  பொது மருத்துவமனைகள்

கடும் நெருக்கடியைச் சந்தித்துள்ள மொன்றியலின் முக்கிய மூன்று பொது மருத்துவமனைகள்

ஆடி 14, 2026
வகை: கியூபெக், முதன்மை செய்தி
வாசிக்கும் நேரம்: 1 நிமிடம்
A A
Share on FacebookShare on Twitter

மொன்றியலில் (Montreal) உள்ள மூன்று முக்கிய பொது மருத்துவமனைகளின் அவசரச் சிகிச்சைப் பிரிவுகள், தங்களின் உத்தியோகபூர்வ கொள்ளளவை விட இரண்டு மடங்குக்கும் அதிகமான நோயாளிகளின் வருகையால் கடுமையான நெருக்கடியைச் சந்தித்து வருகின்றன.

நோயாளிகளின் எண்ணிக்கை சடுதியாக அதிகரித்துள்ள போதிலும், அவர்களுக்குச்  சிகிச்சையளிப்பதற்குப்  போதிய  எண்ணிக்கையிலான  மருத்துவர்களோ அல்லது செவிலியர்களோ இல்லை என, மொன்றியல் மருத்துவமனை வட்டாரங்கள் கவலை வெளியிட்டுள்ளன.

மொன்றியலில் உள்ள யூதப் பொது மருத்துவமனை தற்போதைய நிலவரப்படி, தன்னுடைய செயற்பாட்டு எல்லையைத் தாண்டி 242 சதவீதக் கொள்ளளவுடன் இயங்கி வருகிறது.

இதனைத் தொடர்ந்து, மெக்கில் பல்கலைக்கழக சுகாதார மையம் (MUHC) மற்றும் லேக்சோர் பொது மருத்துவமனை (Lakeshore General Hospital) ஆகிய மருத்துவமனைகளும் தங்களின் அவசரப் பிரிவுகளில் 200 சதவீதத்திற்கும் அதிகமான கொள்ளளவை எட்டியுள்ளன.

பொதுவாகக் குளிர்காலங்களிலேயே இவ்வாறான நெருக்கடி ஏற்படும் நிலையில், ஜூலை மாத கோடைகாலத்தில் அவசரப் பிரிவுகளில் இத்தனை அதிகமான நோயாளிகள் திரள்வது முன்னெப்போதும் இல்லாத அரியதொரு அசாதாரண நிகழ்வு என்று அவசரச் சிகிச்சை நிபுணர்கள் சுட்டிக்காட்டியுள்ளனர்.

“அவசரப் பிரிவுக்கு வரும் ஒவ்வொரு நோயாளிக்கும் தகுந்த முறையில் சிகிச்சை அளிப்பதற்கோ  அல்லது  அவர்களைக்  கவனிப்பதற்கோ  தங்களிடம் தற்போதைய சூழலில் போதிய பணியாளர்கள் இல்லை” என்று அவசரப் பிரிவு மருத்துவர் ஒருவர் ஊடகங்களிடம் கவலை தெரிவித்துள்ளார்.

கியூபெக் அவசரச் சிகிச்சை மருத்துவ நிபுணர்கள் சங்கத்தின் (AQsep) தலைவரும், மொன்றியல் இதய நிறுவனத்தின் அவசரப் பிரிவு மருத்துவருமான டாக்டர் கில்பர்ட் புஷெர் (Dr. Gilbert Boucher) இது குறித்துக் கருத்து வெளியிடுகையில், இந்தத் திடீர் நோயாளிகள்   அதிகரிப்பிற்குப் பல காரணங்கள் உள்ளதாகக் குறிப்பிட்டுள்ளார்.

குறிப்பாக அண்மையில் கியூபெக்கில் நிலவிய கடுமையான கோடைகால வெப்ப அலை (Heat Wave) காரணமாக, முதியவர்கள் மற்றும் பலவீனமான உடல்நிலை கொண்டவர்கள் இதயம் மற்றும் சுவாசப் பிரச்சினைகளுடன் அதிகளவில் மருத்துவமனைகளில் அனுமதிக்கப்பட்டு வருவதாக அவர் கூறினார்.

இதேவேளை, அவசரமற்ற சுகாதார ஆலோசனைகளைப் பெறுவதற்காகப் பொதுமக்கள் ‘811’ என்ற இலக்கத்திற்கு அழைப்பு எடுக்கும் போது, கடந்த சில வாரங்களாகப் போதிய அதிகாரிகள் இல்லாததால் மிக நீண்ட நேரம் காத்திருக்க வேண்டிய நிலை ஏற்பட்டுள்ளது.

இதனால் சோர்வடையும் நோயாளிகள் வேறு வழியின்றி நேரடியாக மருத்துவமனைகளின் அவசரப் பிரிவுகளை  நோக்கித்  படையெடுக்கத்  தொடங்கியுள்ளமையும், இந்த நெருக்கடி நிலைக்கு ஒரு காரணமாகக் கூறப்பட்டுள்ளது.

தொடர்புடைய செய்திகள்

முன்னாள் ஆடை வடிவமைப்பு நிபுணரான  பீட்டர் நைகார்ட் மீதான  விசாரணை ஆரம்பம்
கியூபெக்

முன்னாள் ஆடை வடிவமைப்பு நிபுணரான பீட்டர் நைகார்ட் மீதான விசாரணை ஆரம்பம்

ஆடி 14, 2026
கியூபெக்கில் மூடப்பட்டுள்ள  இரு முன்னணித் தனியார் கல்லூரிகள்
கியூபெக்

கியூபெக்கில் மூடப்பட்டுள்ள  இரு முன்னணித் தனியார் கல்லூரிகள்

ஆடி 14, 2026
 திறந்தவெளியில் தீ மூட்டுவதற்கு விதிக்கப்பட்டிருந்த தடையை நீக்கிய கியூபெக் மாகாண அரசு
கியூபெக்

 திறந்தவெளியில் தீ மூட்டுவதற்கு விதிக்கப்பட்டிருந்த தடையை நீக்கிய கியூபெக் மாகாண அரசு

ஆடி 14, 2026
கியூபெக் அரசின் நீர்மின் திட்ட ஒப்பந்தம்: பொது வாக்கெடுப்பில் பூர்வகுடிமக்கள் அaதிரடி நிராகரிப்பு!
அண்மைய செய்திகள்

கியூபெக் அரசின் நீர்மின் திட்ட ஒப்பந்தம்: பொது வாக்கெடுப்பில் பூர்வகுடிமக்கள் அaதிரடி நிராகரிப்பு!

ஆடி 14, 2026
‘கியூபெக் தேர்தலில் தாம் போட்டியிடப் போவதில்லை’ குடிவரவு அமைச்சர் பிரான்சுவா பொன்னார்டெல் அறிவிப்பு!
அண்மைய செய்திகள்

‘கியூபெக் தேர்தலில் தாம் போட்டியிடப் போவதில்லை’ குடிவரவு அமைச்சர் பிரான்சுவா பொன்னார்டெல் அறிவிப்பு!

ஆடி 14, 2026
பழைய துறைமுகத்தில் நபர் ஆற்றுக்குள் விழுந்து விபத்து: தீவிர தேடுதலுக்குப் பின் கடலோரக் காவல்படையினால் மீட்பு!
அண்மைய செய்திகள்

பழைய துறைமுகத்தில் நபர் ஆற்றுக்குள் விழுந்து விபத்து: தீவிர தேடுதலுக்குப் பின் கடலோரக் காவல்படையினால் மீட்பு!

ஆடி 14, 2026
# # #
விளம்பரம்

வாராந்திர செய்திகள்

இன்றைய செய்திகள்
செவ்வாய்திங்கள்ஞாயிறுசனிவெள்ளிவியாழன்

சிறப்புச் செய்திகள்

கியூபெக் அரசின் நீர்மின் திட்ட ஒப்பந்தம்: பொது வாக்கெடுப்பில் பூர்வகுடிமக்கள் அaதிரடி நிராகரிப்பு!

கியூபெக் அரசின் நீர்மின் திட்ட ஒப்பந்தம்: பொது வாக்கெடுப்பில் பூர்வகுடிமக்கள் அaதிரடி நிராகரிப்பு!

22 மணத்தியாலங்கள் முன்னர்
டொராண்டோ தடுப்புக்காவல் மையத்தில் கைதிகளைச் சித்திரவதை செய்த குற்றச்சாட்டை மறுத்த சிரேஷ்ட சிறை அதிகாரி

டொராண்டோ தடுப்புக்காவல் மையத்தில் கைதிகளைச் சித்திரவதை செய்த குற்றச்சாட்டை மறுத்த சிரேஷ்ட சிறை அதிகாரி

4 நாட்கள் முன்னர்
யாழ்.சிறைச்சாலை உத்தியோகஸ்தரை  தாக்கிய விளக்கமறியல் கைதி

யாழ்.சிறைச்சாலை உத்தியோகஸ்தரை தாக்கிய விளக்கமறியல் கைதி

8 மணத்தியாலங்கள் முன்னர்
தெல்லிப்பழை புற்றுநோய் வைத்தியசாலையில் விடுதி திறப்பு

தெல்லிப்பழை புற்றுநோய் வைத்தியசாலையில் விடுதி திறப்பு

7 மணத்தியாலங்கள் முன்னர்
மொன்றியலின் மெட்ரோபொலிட்டன் அதிவேக நெடுஞ்சாலையின் கிழக்கு பிரதான வழித்தடம் வார இறுதியில் முழுமையாக மூடல்

மொன்றியலின் மெட்ரோபொலிட்டன் அதிவேக நெடுஞ்சாலையின் கிழக்கு பிரதான வழித்தடம் வார இறுதியில் முழுமையாக மூடல்

6 நாட்கள் முன்னர்

எம்மவர் நிகழ்வுகள்

மன்னிக்கவும், நிகழ்வுகள் எதுவும் இல்லை!
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • விளையாட்டு
  • சினிமா
  • தொழில்நுட்பம்
+1 514-800-2610

© 2024 Eye Tamil Media Network | All Rights Reserved

பெறுபேறு கிடைக்கவில்லை
அனைத்து பெறுபேறுகளையும் பார்க்கவும்
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • விளையாட்டு
  • சினிமா
  • தொழில்நுட்பம்
  • கனடா
  • கியூபெக்
  • ஆரோக்கியம்
  • ஆன்மீகம்
  • துயர் பகிர்வு
  • இன்றைய ராசிபலன்

© 2024 Eye Tamil Media Network | All Rights Reserved

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In