கியூபெக் மாகாணத்தின் பல பிராந்தியங்களில் காடுகளுக்குள்ளோ அல்லது அதற்கு அருகிலோ திறந்தவெளியில் தீ மூட்டுவதற்கு விதிக்கப்பட்டிருந்த தடை தற்காலிகமாக நீக்கப்படுவதாக மாகாண அரசு உத்தியோகபூர்வமாக அறிவித்துள்ளது.
மாகாணத்தில் நிலவி வந்த தீவிர காட்டுத் தீ அபாயம் மற்றும் வறண்ட காலநிலை தணிந்துள்ளதைத் தொடர்ந்தே, கியூபெக் அரசு இந்த அறிவித்தலை வெளியிட்டுள்ளது.
கியூபெக் மாகாண உள்நாட்டு பாதுகாப்பு அமைச்சு (MSI), காடுகளின் பாதுகாப்பு மற்றும் காட்டுத் தீ தடுப்புக்கான சிறப்பு அமைப்பான ‘சொப்ஃபியூ’ (SOPFEU) உடன் இணைந்து மேற்கொண்ட விரிவான கள ஆய்வுகளின் பின்னர் இந்தத் தீர்மானத்தை மேற்ஒண்டுள்ளது.
மாகாணத்தில் நிலவும் தற்போதைய வானிலை மாற்றம் மற்றும் காட்டுத் தீயணைப்புப் படையினரின் பணிச்சுமை ஆகியவற்றைக் கருத்திற் கொண்டு, இந்தத் தடை நீக்க உத்தரவு உடனடியாக நடைமுறைக்கு வருவதாக அறிவிக்கப்பட்டுள்ளது.











