நீட் தேர்வுக்கு எதிராக இடம்பெற்ற போராட்டத்தில் எதிர்கட்சி தலைவர் ராகுல் காந்தி உள்ளிட்ட தலைவர்கள் கைது செய்யப்பட்டதிற்கு தமிழக வெற்றி கழகம் கண்டனம் தெரிவித்துள்ளது.
இது தொடர்பில் மேலும் தெரிவிக்கையில்,
எதிர்க்கட்சி தலைவர் மற்றும் ஏனைய தலைவர்களை இவ்வாறு கைது செய்வது ஜனநாயகத்திற்கு எதிரான ஒரு செயல் என்று தமிழக முதலமைச்சர் விஜய் தெரிவித்துள்ளார்.
நீட் தேர்வு தொடர்பில் தாங்களும் அதிருப்தியை வெளிப்படுத்தியிருந்தோம், இந்த தேர்வு முற்றாக ஒழிக்கப்பட வேண்டும், மாணவர்களை அழிவுக்கு இட்டு செல்லும் இந்த தேர்வு அவசியமற்றது.
மேலும் மத்திய அரசு கல்வியை உடனடியாக மாநில பட்டியலுக்கு மாற்ற வேண்டும். இதில் சட்டசிக்கல் ஏதும் இருப்பின் அதை சீர் செய்யும் வரை சிறப்பு பொது பட்டியல் ஒன்றை உருவாக்கி மாநில அரசுக்கும் கல்வி தொடர்பிலான முழு அதிகாரத்தை வழங்க வேண்டும் என குறிப்பிட்டுள்ளார்.











