எத்தியோப்பியாவின் அம்ஹாரா பகுதியில் உள்ள ஒரு மடாலயத்திற்கு அருகே ஏற்பட்ட நிலச்சரிவில் 14 பேர் உயிரிழந்ததாக வெளிநாட்டு ஊடகங்கள் தெரிவிக்கின்றன.
தற்போது மீட்புக் குழுவினர் உடல்களை மீட்கும் பணியில் ஈடுபட்டுள்ளனர்.
எத்தியோப்பியாவின் முக்கிய மழைக்காலமான ஜூன் முதல் செப்டம்பர் வரையிலான காலகட்டத்தில், கனமழை பெய்துகொண்டிருந்தபோது இந்த நிலச்சரிவு ஏற்பட்டதாக வெளிநாட்டு ஊடகங்கள் கூறுகின்றன.











