‘பியார் பிரேமா காதல்’ மற்றும் ‘ஸ்டார்’ போன்ற வெற்றிப் படங்களை இயக்கிய முன்னணி இயக்குநர் இளன், முதன்முறையாகக் கதாநாயகனாக அறிமுகமாகும் புதிய திரைப்படம் ‘பியார் பிரேமா கல்யாணம்’.
இத்திரைப்படத்தில் இளனுக்கு ஜோடியாக நடிகை சான்வி மேகனா நடிக்கிறார். மேலும் ராதிகா சரத்குமார், யோகி பாபு, எம்.எஸ். பாஸ்கர், கீதா கைலாசம், இளங்கோ குமரவேல், செந்தில் மற்றும் மாறன் உள்ளிட்ட பல முன்னணி நட்சத்திரங்கள் முக்கியக் கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர்.
இப்படத்திற்கு இசையமைப்பாளர் யுவன் சங்கர் ராஜா இசையமைத்துள்ளார். ஏற்கனவே படத்தின் முதல் பாடலான ‘அட்ராசிட்டி’ வெளியாகி ரசிகர்களிடையே நல்ல வரவேற்பைப் பெற்றிருந்த நிலையில், தற்போது படத்தின் இரண்டாவது பாடலான ‘மாப்பிள்ளை சிங்கம்’ பாடல் அதிகாரப்பூர்வமாக வெளியாகி இணையத்தில் கவனம் ஈர்த்து வருகிறது.
இத்திரைப்படம் வரும் ஆகஸ்ட் 21-ஆம் தேதி தமிழ், மலையாளம், தெலுங்கு, கன்னடம் மற்றும் ஹிந்தி ஆகிய மொழிகளில் நேரடியாக நெட்பிளிக்ஸ் (Netflix) ஓடிடி தளத்தில் வெளியாகவுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.











