EyeTamil News
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • விளையாட்டு
  • சினிமா
  • தொழில்நுட்பம்
Watch Live
பெறுபேறு கிடைக்கவில்லை
அனைத்து பெறுபேறுகளையும் பார்க்கவும்
  • கனடா
  • கியூபெக்
  • ஆரோக்கியம்
  • ஆன்மீகம்
  • துயர் பகிர்வு
  • இன்றைய ராசிபலன்
  • எம்மவர் நிகழ்வுகள்
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • விளையாட்டு
  • சினிமா
  • தொழில்நுட்பம்
பெறுபேறு கிடைக்கவில்லை
அனைத்து பெறுபேறுகளையும் பார்க்கவும்
EyeTamil News
Watch Live
முகப்பு இலங்கை
இரண்டு ஆண்டுகள் கடந்தும் காணிகளை விடுவிக்க நடவடிக்கை எடுக்க வில்லை – சுரேஷ் பிரேமச்சந்திரன்

இரண்டு ஆண்டுகள் கடந்தும் காணிகளை விடுவிக்க நடவடிக்கை எடுக்க வில்லை – சுரேஷ் பிரேமச்சந்திரன்

ஆவணி 10, 2026
வகை: இலங்கை
வாசிக்கும் நேரம்: 1 நிமிடம்
A A
Share on FacebookShare on Twitter

காணிகளை விடுவிப்போம் என கூறியவர்கள் இரண்டு ஆண்டுகள் கடந்தும் காணிகளை விடுவிக்க நடவடிக்கை எடுக்க வில்லை என ஜனநாயக தமிழ் தேசிய கூட்டணியின் ஊடகப்பேச்சாளர் சுரேஷ் பிரேமச்சந்திரன் குற்றம் சாட்டியுள்ளார்.

யாழ்ப்பாணத்தில் நடைபெற்ற ஊடக சந்திப்பின் போதே அவ்வாறு தெரிவித்தார்

மேலும் தெரிவிக்கையில்,

ஒரு வருடத்திற்குள் மாகாண சபை தேர்தல் நடத்தப்படும் என அரசாங்கமும் ஜனாதிபதியும் உறுதியளித்திருந்த போதிலும், இரண்டு ஆண்டுகள் கடந்தும் தேர்தல் நடத்தப்படவில்லை. அடுத்த ஆண்டிலாவது தேர்தல் நடத்தப்படுமா என்ற கேள்வி எழுந்துள்ளது.

அதேபோன்றே காணி விடுவிப்பு தொடர்பில் இரண்டு வருடங்களாக காத்திரமான நடவடிக்கைகள் எடுக்கப்படவில்லை.

ஜனாதிபதியை தமிழ் கட்சிகள் சந்தித்த போதும் , காணி விடுவிப்பு தொடர்பில் முக்கியமாக கூறியிருந்தோம். குறிப்பாக வடக்கு – கிழக்கில் முப்படைகளின் வசமுள்ள காணிகளை விடுவிப்பது தொடர்பில், மலையக மக்களுக்கு காணி பகிர்ந்தளித்து தொடர்பிலும் பேசினோம்

யாழ்ப்பாணத்தில், பலாலி, மயிலிட்டி, தையிட்டி போன்ற பிரதேச மக்களும் முல்லைத்தீவில் கேப்பாப்பிலவு மக்களும் தமது காணிகளை விடுவிக்குமாறு போராடி வருகின்றனர்.

அது மாத்திரமின்றி , மன்னார், கிளிநொச்சி, கிழக்கு மாகாணத்தின் பல்வேறு பகுதிகளில் மக்கள் தங்கள் வாழ்வாதார நிலங்களை மீட்கத் தொடர்ந்து போராட்டங்களை நடத்தி வருகின்றனர். இது தொடர்பில் ஜனாதிபதியிடம் விரிவாக எடுத்து கூறினோம்.

அதற்கு அவர்கள் முப்படைகளிடம் எந்த எந்த காணிகளை விடுவிக்க முடியும் என அறிக்கை ஒன்றினை வழங்குமாறு கூறியுள்ளோம் அறிக்கை கிடைக்கப்பெற்றதும் அதன் அடிப்படையில் காணி விடுவிப்பு நடவடிக்கைகளை முன்னெடுப்போம் என கூறியுள்ளனர்.

மக்களின் காணிகளை விடுவிக்க வேண்டும் என்ற எமது நோக்கத்தில் மாற்றமில்லை என அரசாங்கம் கூறி வந்தாலும் , இரண்டு வருடங்களாக இதையே கூறி வருகின்றனர் இது ஏற்புடையதில்லை

யாழ்ப்பாணத்தில் குறிப்பிட்டு சொல்ல கூடிய அளவுக்கு காணிகள் விடுவிக்கப்படவில்லை. ஒரு சில வீதிகளை மாத்திரமே விடுவித்துள்ளனர்.

தொடர்ச்சியாக மக்கள் தமது காணிகளை விடுவிக்க வேண்டும் என கோரி போராட்டங்களை முன்னெடுத்துள்ளனர். அரசாங்கம் மக்களின் கோரிக்கைக்கு செவிசாய்க்கவில்லை.

நாங்களும் போராட்ட களத்தில் நின்றவர்கள் என கூறி ஆட்சிக்கு வந்தவர்கள் , மக்களின் போராட்டங்களை ,கண்டு கொள்ளாமல் இருப்பதும், அவர்களின் கோரிக்கைகளை செவி சாய்க்காது இருக்கின்றமையும் ஏற்றுக்கொள்ள முடியாது.

நாங்கள் இனவாதிகள் அல்ல மதவாதிகள் இல்லை என அரசாங்கம் கூறிக்கொண்டாலும் , செயலில் அவ்வாறு இல்லை என்றே கூற முடியும் என தெரிவித்துள்ளார்.

தொடர்புடைய செய்திகள்

மன்னார் சௌத்பார் பகுதியில் அனுமதியின்றி ட்ரோன் பறக்கவிட்ட சிறுவன் கைது
இலங்கை

மன்னார் சௌத்பார் பகுதியில் அனுமதியின்றி ட்ரோன் பறக்கவிட்ட சிறுவன் கைது

ஆவணி 10, 2026
நீரியல் வளத் திணைக்களம் விடுத்துள்ள முக்கிய அறிவிப்பு
அண்மைய செய்திகள்

நீரியல் வளத் திணைக்களம் விடுத்துள்ள முக்கிய அறிவிப்பு

ஆவணி 10, 2026
யாழ்ப்பாணத்தில் கண்டெடுக்கப்பட்ட  இராணுவ அங்கி
அண்மைய செய்திகள்

யாழ்ப்பாணத்தில் கண்டெடுக்கப்பட்ட இராணுவ அங்கி

ஆவணி 10, 2026
இலங்கையர்களை இலக்குவைத்து இணையப் பணப்பறிப்பு மோசடி
அண்மைய செய்திகள்

இலங்கையர்களை இலக்குவைத்து இணையப் பணப்பறிப்பு மோசடி

ஆவணி 10, 2026
நாடளாவிய ரீதியிலுள்ள 33 சிறைச்சாலைகளிலும் பலத்த பாதுகாப்பு
அண்மைய செய்திகள்

நாடளாவிய ரீதியிலுள்ள 33 சிறைச்சாலைகளிலும் பலத்த பாதுகாப்பு

ஆவணி 10, 2026
டெங்கு நோயினால் உயிரிழந்தோரின் எண்ணிக்கை அதிகரிப்பு
இலங்கை

டெங்கு நோயினால் உயிரிழந்தோரின் எண்ணிக்கை அதிகரிப்பு

ஆவணி 10, 2026
# # #
விளம்பரம்

வாராந்திர செய்திகள்

இன்றைய செய்திகள்
ஞாயிறுசனிவெள்ளிவியாழன்புதன்செவ்வாய்

சிறப்புச் செய்திகள்

மன்னாரில் தொடர் மின்வெட்டு – பாதிக்கப்படும் பொது மக்கள்

மன்னாரில் தொடர் மின்வெட்டு – பாதிக்கப்படும் பொது மக்கள்

5 நாட்கள் முன்னர்
ஸ்பெயின் அருகே நடுக்கடலில் பழுதான படகு: 15 நாட்கள் உணவு, தண்ணீரின்றி அகதிகள் பலி

ஸ்பெயின் அருகே நடுக்கடலில் பழுதான படகு: 15 நாட்கள் உணவு, தண்ணீரின்றி அகதிகள் பலி

4 நாட்கள் முன்னர்
ஹட்டன் டிக்கோயா பகுதியில் வெள்ளம்

ஹட்டன் டிக்கோயா பகுதியில் வெள்ளம்

7 நாட்கள் முன்னர்
மன்னாரில் முன்னெடுக்கப்பட்ட கவனயீர்ப்பு போராட்டம்

மன்னாரில் முன்னெடுக்கப்பட்ட கவனயீர்ப்பு போராட்டம்

3 நாட்கள் முன்னர்
கோட்டாபயவின் மனு மீதான உத்தரவு செப்டம்பர் 22 க்கு ஒத்திவைப்பு!

கோட்டாபயவின் மனு மீதான உத்தரவு செப்டம்பர் 22 க்கு ஒத்திவைப்பு!

7 நாட்கள் முன்னர்

எம்மவர் நிகழ்வுகள்

மன்னிக்கவும், நிகழ்வுகள் எதுவும் இல்லை!
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • விளையாட்டு
  • சினிமா
  • தொழில்நுட்பம்
+94 77 812 0744

© 2024 Eye Tamil Media Network | All Rights Reserved

பெறுபேறு கிடைக்கவில்லை
அனைத்து பெறுபேறுகளையும் பார்க்கவும்
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • விளையாட்டு
  • சினிமா
  • தொழில்நுட்பம்
  • கனடா
  • கியூபெக்
  • ஆரோக்கியம்
  • ஆன்மீகம்
  • துயர் பகிர்வு
  • இன்றைய ராசிபலன்

© 2024 Eye Tamil Media Network | All Rights Reserved

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In