மொண்ட்ரியல் நகரில் உள்ள குடியிருப்புப் பகுதிகளில், வெறும் 40 நிமிட இடைவெளியில் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த இரண்டு எஸ்.யு.வி (SUV) ரக சொகுசு வாகனங்கள் தீவைத்து அழிக்கப்பட்ட சம்பவம் தொடர்பில், விசாரணைகள் முன்னெடுக்கப்பட்டு வருகின்றன.
இந்தத் தீவைப்பு சம்பவங்கள் தொடா்பாக மொண்ட்ரியல் பொலிஸாரின் (SPVM) தீவைப்பு தடுப்புப் பிரிவு (Arson Squad) விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றது.
மொண்ட்ரியல் பொலிஸார் சம்பவ இடத்திற்குச் சென்றடைவதற்கு முன்பாகவே, மொண்ட்ரியல் நகரத்தின் தீயணைப்புத் துறையினர் (SIM) தீயைக் கட்டுப்பாட்டுக்குள் கொண்டுவந்ததாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்த இரு குற்றச் சம்பவங்களிலும் அருகில் இருந்த வீடுகளுக்கு சேதம் எதுவும் ஏற்படவில்லை என்பதோடு, எவருக்கும் காயங்கள் ஏற்படவில்லை என்றும் அதிகாரிகள் தெரிவித்தனர்.
இந்த இரு தீவைப்புச் சம்பவங்களுக்கும் இடையே தொடர்பு உள்ளதா என்பது குறித்து தற்போது வரை பொலிஸார் எவ்வித அதிகாரப்பூர்வ அறிவிப்பையும் வெளியிடவில்லை என்பது சுட்டிக்காட்டத்தக்கது.











