EyeTamil News
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • விளையாட்டு
  • சினிமா
  • தொழில்நுட்பம்
Watch Live
பெறுபேறு கிடைக்கவில்லை
அனைத்து பெறுபேறுகளையும் பார்க்கவும்
  • கனடா
  • கியூபெக்
  • ஆரோக்கியம்
  • ஆன்மீகம்
  • துயர் பகிர்வு
  • இன்றைய ராசிபலன்
  • எம்மவர் நிகழ்வுகள்
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • விளையாட்டு
  • சினிமா
  • தொழில்நுட்பம்
பெறுபேறு கிடைக்கவில்லை
அனைத்து பெறுபேறுகளையும் பார்க்கவும்
EyeTamil News
Watch Live
முகப்பு கியூபெக்
வாக்காளர் தகவல் ஆவணங்களை அனுப்புவதற்கு எதிர்ப்பு தெரிவித்துள்ள  கியூபெக் லிபரல் கட்சி

வாக்காளர் தகவல் ஆவணங்களை அனுப்புவதற்கு எதிர்ப்பு தெரிவித்துள்ள  கியூபெக் லிபரல் கட்சி

புரட்டாதி 4, 2026
வகை: கியூபெக்
வாசிக்கும் நேரம்: 1 நிமிடம்
A A
Share on FacebookShare on Twitter

கியூபெக்கில் நடைபெறவுள்ள மாகாணத் தேர்தலுக்கான வாக்காளர் தகவல் ஆவணங்களை பிரெஞ்சு மொழியில் மட்டுமே அஞ்சல் மூலம் அனுப்புவதற்கு எடுக்கப்பட்டுள்ள முடிவினை கியூபெக் லிபரல் கட்சி எதிர்த்துள்ளது.

கியூபெக் லிபரல் கட்சியின் தலைவர் சார்ள்ஸ் மிலியார்ட் (Charles Milliard) இது தொடர்பில் கடும் கண்டனம் தெரிவித்துள்ளார்.

ஜனநாயக உரிமைகளுக்கு முன்னால் மொழி அரசியலை முன்னிறுத்துவதைக் கைவிட்டு, இத்தவறான முடிவை உடனடியாகத் திரும்பப் பெறுமாறு கியூபெக் முதலமைச்சர் கிறிஸ்டின் ஃப்ரெஷெட்டிற்கு (Christine Fréchette) அவர் பகிரங்கக் கோரிக்கை விடுத்துள்ளார்.

எதிர்வரும் ஒக்டோபர் 5-ஆம் திகதி கியூபெக் மாகாணத் தேர்தல் நடைபெறவுள்ள நிலையில், வாக்காளர் வழிகாட்டி மற்றும் தகவல் ஆவணங்கள் அனைத்தும் பிரெஞ்சு மொழியில் மட்டுமே அச்சிட்டு அனுப்பப்படும் எனத் தேர்தல் ஆணையமான எலக்சன்ஸ் கியூபெக் (Élections Québec) கடந்த செவ்வாய்க்கிழமை அன்று அறிவித்தது.

கியூபெக்கின் Bill 96 எனப்படும் பிரெஞ்சு மொழிச் சட்டத்திற்கு அமைவாகவே இந்நடவடிக்கை எடுக்கப்படுவதாகத் தெரிவிக்கப்பட்டது.

இந்த முடிவுக்கு எதிர்ப்புக்கள் கிளம்பியபோதிலும், தேர்தல் ஆவணங்களை வேறு மொழியில் அனுப்பப்போவதில்லை என்பதில் தாம் உறுதியாக இருப்பதாக, கியூபெக் முதலமைச்சர் கிறிஸ்டின் ஃப்ரெஷெட் செய்தியாளர் சந்திப்பில் தெரிவித்தார்.

இதனையடுத்து, கியூபெக் முதலமைச்சருக்குத் கடிதம் ஒன்றை எழுதியுள்ள கியூபெக் லிபரல் கட்சியின் தலைவர் சார்ளஸ் மிலியார்ட், அரசின் இப்போக்கை “ஆங்கிலம் பேசும் கியூபெக் மக்களின் ஜனநாயக உரிமைகள் மீதான நியாயமற்ற தாக்குதல்” எனக் கடுமையாக விமர்சித்துள்ளார்.

தொடர்புடைய செய்திகள்

மொண்ட்ரியலில் பெற்றோரைக் தாக்கிய குற்றச்சாட்டில் 26 வயது இளைஞர் கைது
கியூபெக்

மொண்ட்ரியலில் பெற்றோரைக் தாக்கிய குற்றச்சாட்டில் 26 வயது இளைஞர் கைது

புரட்டாதி 7, 2026
மொண்ட்ரியலில் தீக்கிரையான எஸ்.யு.வி ரக சொகுசு வாகனங்கள் தொடர்பான  விசாரணைகள் ஆரம்பம்
கியூபெக்

மொண்ட்ரியலில் தீக்கிரையான எஸ்.யு.வி ரக சொகுசு வாகனங்கள் தொடர்பான விசாரணைகள் ஆரம்பம்

புரட்டாதி 7, 2026
தேர்தல் பிரச்சாரப் பணிகளைத் தற்காலிகமாக இடைநிறுத்தியுள்ள கிறிஸ்டின் ஃபிரஷெட்
கியூபெக்

தேர்தல் பிரச்சாரப் பணிகளைத் தற்காலிகமாக இடைநிறுத்தியுள்ள கிறிஸ்டின் ஃபிரஷெட்

புரட்டாதி 7, 2026
கனேடிய மத்திய மேல்முறையீட்டு நீதிமன்றம் வழங்கிய வரலாற்றுச் சிறப்புமிக்க தீர்ப்பு
கியூபெக்

கனேடிய மத்திய மேல்முறையீட்டு நீதிமன்றம் வழங்கிய வரலாற்றுச் சிறப்புமிக்க தீர்ப்பு

புரட்டாதி 4, 2026
ஓட்டிசம் குறைபாட்டினால் பாதிக்கப்பட்ட சிறுமிக்கு புதிய பாடசாலையில் அனுமதி
கியூபெக்

ஓட்டிசம் குறைபாட்டினால் பாதிக்கப்பட்ட சிறுமிக்கு புதிய பாடசாலையில் அனுமதி

புரட்டாதி 4, 2026
மொண்ட்ரியல் பொலிஸ் திணைக்களம் விடுத்துள்ள முக்கிய அறிவிப்பு
கியூபெக்

மொண்ட்ரியல் பொலிஸ் திணைக்களம் விடுத்துள்ள முக்கிய அறிவிப்பு

புரட்டாதி 4, 2026
# # #
விளம்பரம்

வாராந்திர செய்திகள்

இன்றைய செய்திகள்
ஞாயிறுசனிவெள்ளிவியாழன்புதன்செவ்வாய்

சிறப்புச் செய்திகள்

கனடாவில் எரிபொருள் வரி விலக்கு நீட்டிப்பு

கனடாவில் எரிபொருள் வரி விலக்கு நீட்டிப்பு

3 நாட்கள் முன்னர்
வெல்லம்பிட்டியவில் 130 மின்னணு சிகரெட்டுகளுடன் ஒருவர் கைது

வெல்லம்பிட்டியவில் 130 மின்னணு சிகரெட்டுகளுடன் ஒருவர் கைது

5 நாட்கள் முன்னர்
மன்னார்- யாழ்ப்பாணம் பிரதான வீதியில் அமைந்துள்ள பிரதான பாலங்களின் அவல நிலை

மன்னார்- யாழ்ப்பாணம் பிரதான வீதியில் அமைந்துள்ள பிரதான பாலங்களின் அவல நிலை

7 minutes முன்னர்
இலங்கை – சீனா இடையே புதிய ஒப்பந்தம்

இலங்கை – சீனா இடையே புதிய ஒப்பந்தம்

6 நாட்கள் முன்னர்
பிரச்சினைகளுக்கு தீர்வு வழங்காமைக்கு எதிராக விரிவுரையாளர்கள் போராட்டம்

பிரச்சினைகளுக்கு தீர்வு வழங்காமைக்கு எதிராக விரிவுரையாளர்கள் போராட்டம்

5 நாட்கள் முன்னர்

எம்மவர் நிகழ்வுகள்

மன்னிக்கவும், நிகழ்வுகள் எதுவும் இல்லை!
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • விளையாட்டு
  • சினிமா
  • தொழில்நுட்பம்
+94 77 812 0744

© 2024 Eye Tamil Media Network | All Rights Reserved

பெறுபேறு கிடைக்கவில்லை
அனைத்து பெறுபேறுகளையும் பார்க்கவும்
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • விளையாட்டு
  • சினிமா
  • தொழில்நுட்பம்
  • கனடா
  • கியூபெக்
  • ஆரோக்கியம்
  • ஆன்மீகம்
  • துயர் பகிர்வு
  • இன்றைய ராசிபலன்

© 2024 Eye Tamil Media Network | All Rights Reserved

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In