EyeTamil News
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • விளையாட்டு
  • சினிமா
  • தொழில்நுட்பம்
Watch Live
பெறுபேறு கிடைக்கவில்லை
அனைத்து பெறுபேறுகளையும் பார்க்கவும்
  • கனடா
  • கியூபெக்
  • ஆரோக்கியம்
  • ஆன்மீகம்
  • துயர் பகிர்வு
  • இன்றைய ராசிபலன்
  • எம்மவர் நிகழ்வுகள்
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • விளையாட்டு
  • சினிமா
  • தொழில்நுட்பம்
பெறுபேறு கிடைக்கவில்லை
அனைத்து பெறுபேறுகளையும் பார்க்கவும்
EyeTamil News
Watch Live
முகப்பு கியூபெக்
பெண்ணொருவர் மீது தாக்குதல் நடாத்திய 8 சிறுவர்கள் கைது

பெண்ணொருவர் மீது தாக்குதல் நடாத்திய 8 சிறுவர்கள் கைது

புரட்டாதி 8, 2026
வகை: கியூபெக்
வாசிக்கும் நேரம்: 1 நிமிடம்
A A
Share on FacebookShare on Twitter

திருடப்பட்ட வாகனம் ஒன்றில் பயணித்து பெண்ணொருவர் மீது ஆயுதப் பிரயோகத் தாக்குதல் நடாத்தியதுடன், பொலிஸாரின் பிடியிலிருந்து தப்பிக்க முற்பட்ட 14 முதல் 18 வயதுக்குட்பட்ட 8 சிறுவர்களை, லோங்கே மற்றும் மொண்ட்ரியால் பொலிஸார் இணைந்து கைது செய்துள்ளனர்.

லோங்கே (Longueuil) நகரிலுள்ள ரோலண்ட்-தெரியன் (Roland-Therrien) மற்றும் ஜாக்-கார்ட்டியர் ஈஸ்ட் (Jacques-Cartier East) வீதிச் சந்திப்பிற்கு அருகிலுள்ள வணிக வளாகம் ஒன்றின் வாகன தரிப்பிடத்திலேயே இச்சம்பவம் ஆரம்பமானது.

சம்பவ இடத்திலிருந்து தப்பியோடிய வாகனத்தைக் கண்டறிந்த லோங்கே பொலிஸார் (SPAL), அதனை உடனடியாக நிறுத்துமாறு உத்தரவிட்டனர்.

இருப்பினும், வாகனத்தைச் செலுத்திய சிறுவன் பொலிஸாரின் கட்டளையைப் புறக்கணித்து காரை வேகமாகச் செலுத்தியதால், பொலிஸார் வாகனத்தைத் துரத்தத் தொடங்கினர்.

இந்தத் துரத்தல் நடவடிக்கை லோங்கே நகரிலிருந்து மொண்ட்ரியல் நகர எல்லை வரை நீடித்தது.

இதனைத் தொடர்ந்து, லோங்கே பொலிஸ் பிரிவுக்கு உதவியாக மொண்ட்ரியால் பொலிஸ் சேவை (SPVM) மற்றும் கியூபெக் மாகாணப் பொலிஸார் (Sûreté du Québec) ஆகிய மூன்று பொலிஸ் படைகளும் இணைந்து துரித நடவடிக்கை மேற்கொண்டு, சந்தேகநபர்கள் பயணித்த வாகனத்தைச் சுற்றி வளைத்து 8 சிறுவர்களையும் கைது செய்தனர்.

அவர்கள் பயணித்த கார் திருடப்பட்ட ஒன்று என்பதும் சோதனைகளின் போது உறுதி செய்யப்பட்டது.

கைது செய்யப்பட்ட 8 சிறுவர்களில் 6 பேர் நிபந்தனைகளுடன் கூடிய பிணையில் விடுவிக்கப்பட்டுள்ளதுடன், இருவர் தொடர்ந்தும் பொலிஸ் காவலில் வைக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

தொடர்புடைய செய்திகள்

பாலியல் குற்றச்சாட்டிலிருந்து கனடிய ராப் பாடகர் கேனான் விடுதலை
கியூபெக்

பாலியல் குற்றச்சாட்டிலிருந்து கனடிய ராப் பாடகர் கேனான் விடுதலை

புரட்டாதி 10, 2026
கியூபெக்கில் நெடுஞ்சாலை 20 திட்டத்தை முடிக்க கோரிக்கை
கியூபெக்

கியூபெக்கில் நெடுஞ்சாலை 20 திட்டத்தை முடிக்க கோரிக்கை

புரட்டாதி 10, 2026
லாவாலில் வாகனத்திற்குத் தீவைப்பு
கியூபெக்

லாவாலில் வாகனத்திற்குத் தீவைப்பு

புரட்டாதி 10, 2026
கியூபெக் தேர்தலில் கடும் விவாதங்களை தோற்றுவித்துள்ள சர்ச்சில் ஃபால்ஸ் நீர்மின் ஒப்பந்தம்
கியூபெக்

கியூபெக் தேர்தலில் கடும் விவாதங்களை தோற்றுவித்துள்ள சர்ச்சில் ஃபால்ஸ் நீர்மின் ஒப்பந்தம்

புரட்டாதி 8, 2026
சார்லஸ் மிலியார்ட்டின் முக்கிய தேர்தல் வாக்குறுதி
கியூபெக்

சார்லஸ் மிலியார்ட்டின் முக்கிய தேர்தல் வாக்குறுதி

புரட்டாதி 8, 2026
மொண்ட்ரியலில் பெற்றோரைக் தாக்கிய குற்றச்சாட்டில் 26 வயது இளைஞர் கைது
கியூபெக்

மொண்ட்ரியலில் பெற்றோரைக் தாக்கிய குற்றச்சாட்டில் 26 வயது இளைஞர் கைது

புரட்டாதி 7, 2026
# # #
விளம்பரம்

வாராந்திர செய்திகள்

இன்றைய செய்திகள்
புதன்செவ்வாய்திங்கள்ஞாயிறுசனிவெள்ளி

சிறப்புச் செய்திகள்

குமாரசாமி கிருசாந்தியின்  30 ஆம்  ஆண்டு நினைவேந்தல் நிகழ்வு

குமாரசாமி கிருசாந்தியின் 30 ஆம் ஆண்டு நினைவேந்தல் நிகழ்வு

3 நாட்கள் முன்னர்
கப்பலில் இந்தியா சென்றவர்கள் திருப்பி அனுப்பட்டனர்

கப்பலில் இந்தியா சென்றவர்கள் திருப்பி அனுப்பட்டனர்

3 நாட்கள் முன்னர்
திருட்டு கும்பலின் தலைவர் ரணில் – பா.உ.கந்தசாமி பிரபு காட்டம்

திருட்டு கும்பலின் தலைவர் ரணில் – பா.உ.கந்தசாமி பிரபு காட்டம்

3 நாட்கள் முன்னர்
மன்னார் அரசாங்க அதிபரிடம் கையளிக்கப்பட்ட மகஜர்

மன்னார் அரசாங்க அதிபரிடம் கையளிக்கப்பட்ட மகஜர்

7 நாட்கள் முன்னர்
கிளிநொச்சியில் முற்றாக எரிந்த தனியார் பதிப்பகம்

கிளிநொச்சியில் முற்றாக எரிந்த தனியார் பதிப்பகம்

4 நாட்கள் முன்னர்

எம்மவர் நிகழ்வுகள்

மன்னிக்கவும், நிகழ்வுகள் எதுவும் இல்லை!
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • விளையாட்டு
  • சினிமா
  • தொழில்நுட்பம்
+94 77 812 0744

© 2024 Eye Tamil Media Network | All Rights Reserved

பெறுபேறு கிடைக்கவில்லை
அனைத்து பெறுபேறுகளையும் பார்க்கவும்
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • விளையாட்டு
  • சினிமா
  • தொழில்நுட்பம்
  • கனடா
  • கியூபெக்
  • ஆரோக்கியம்
  • ஆன்மீகம்
  • துயர் பகிர்வு
  • இன்றைய ராசிபலன்

© 2024 Eye Tamil Media Network | All Rights Reserved

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In