கியூபெக்கின் மொன்றியலுக்கு அருகிலுள்ள கஹ்னாவாகே பகுதியில் அமைந்துள்ள ‘The Haunted Woods’ என்ற திகில் நிறைந்த காட்டுப் பாதை, ஹாலோவீன் கொண்டாட்டத்தின் முக்கிய ஈர்ப்புகளில் ஒன்றாக விளங்குகிறது.
சுமார் 20 நிமிடங்கள் நடந்து செல்லக்கூடிய இந்தக் காட்டுப் பாதையில், திகிலூட்டும் திருப்பங்கள், புகழ்பெற்ற திகில் திரைப்படங்களை நினைவூட்டும் காட்சிகள் மற்றும் பார்வையாளர்களைப் பயமுறுத்துவதற்காகவே பயிற்சி பெற்ற கலைஞர்கள் எனப் பல்வேறு அம்சங்கள் இடம்பெற்றுள்ளன.
காட்டுக்குள் நுழையும் பார்வையாளர்கள், எதிர்பாராத திகில் காட்சிகளையும் அதிர்ச்சியூட்டும் அனுபவங்களையும் எதிர்கொள்ளும் வகையில் இந்த நிகழ்வு வடிவமைக்கப்பட்டுள்ளது.
இந்தத் திகில் நிகழ்வை ஜேம்ஸ் டே என்பவர் 2005ஆம் ஆண்டு முதன்முதலில் ஏற்பாடு செய்தார். அன்றிலிருந்து ஹாலோவீன் கொண்டாட்டங்களுடன் தொடர்புடைய ஒரு தனித்துவமான அனுபவமாக ‘The Haunted Woods’ அறியப்படுகிறது.
ஹாலோவீன் காலத்தில் திகில் அனுபவங்களை விரும்புவோருக்கு, இந்தக் காட்டுப் பயணம் வித்தியாசமான பொழுதுபோக்காக அமைகிறது.











