மொன்றியல் நகருக்கு அருகில் உள்ள ஹாம்ப்ஸ்டெட் (Hampstead) நகரின் மேயர் ஜெரமி லெவி (Jeremy Levi), பாலஸ்தீனம் மற்றும் பாலஸ்தீன ஆதரவு செயற்பாட்டாளர்கள் தொடர்பாகச் சமூக வலைதளங்களில் வெளியிட்ட கருத்துக்கள் காரணமாக தொழில்முறை நெறிமுறை மீறலில் ஈடுபட்டுள்ளதை ஒப்புக்கொண்டுள்ளார்.
அவருக்கு 30,000 டொலர் அபராதம் விதிக்கப்பட்டுள்ளது.
கியூபெக் தொழில்முறை கணக்காளர்கள் ஒழுங்குமுறை அமைப்பிடம் ஜெரமி லெவி மீது ஒப்புதல் அளிக்கப்பட்டது.
கணக்காளர் தொழிலின் நற்பெயரைக் குந்தகத்திற்குள்ளாக்கும் வகையில் ஜெரமி லெவி கருத்துக்களை வெளியிட்டதாகக் குறித்த புகாரில் சுட்டிக்காட்டப்பட்டிருந்தது.
ஒழுக்காற்று மன்றத்தின் பரிந்துரையின் அடிப்படையில் இந்த அபராதத் தொகையுடன் சேர்த்து, கட்டாயப் பயிற்சி ஒன்றையும் மேற்கொள்ளுமாறு அவருக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது.











