கியூபெக் நகரில் (Quebec City) உள்ள போபார் (Beauport) பகுதியில் அமைந்துள்ள வணிக வளாகத்திற்கு அருகில் திடீரெனத் துப்பாக்கிச் சூடு நடத்தப்பட்டதைத் தொடர்ந்து, சந்தேக நபர்களைத் தேடும் பணியில் பொலிஸார் தீவிரமாக ஈடுபட்டுள்ளனர்.
இச்சம்பவத்தையடுத்து அப்பகுதியில் உள்ள சூப்பர் சி (Super C) பல்பொருள் அங்காடியில் இருந்த வாடிக்கையாளர்கள் உள்ளேயே முடக்கி வைக்கப்பட்டதுடன், கியூபெக் மதுபானக் கழகத்தின் (SAQ) கிளைக் கடை உடனடியாக மூடப்பட்டது.
கியூபெக் நகர் பொலிஸார் வெளியிட்ட தகவலின்படி, ரேமண்ட் பவுவர்ட் (Raymond Boulevard) மற்றும் நோர்டிக் அவென்யூ (Nordique Avenue) சந்திப்புக்கு அருகில் உள்ள வணிக வளாகப் பகுதியிலேயே இந்தச் சம்பவம் நிகழ்ந்துள்ளது.
துப்பாக்கிச் சூட்டின்போது அப்பகுதியில் நின்ற வாகனம் ஒன்றின் மீது தோட்டா பாய்ந்துள்ளதை பொலிஸார் கண்டறிந்துள்ளனர்.
தப்பியோடிய சந்தேக நபர்களைக் கைது செய்வதற்கான தீவிர விசாரணைகளும் தேடுதல் நடவடிக்கையும் தொடர்ந்து நடைபெற்று வருவதாக, கியூபெக் பொலிஸார் தெரிவித்தமை குறிப்பிடத் தக்கது.











