யாழ்ப்பாண மாவட்ட கைத்தொழில் அபிவிருத்திச் சபையின் பிரதிப் பணிப்பாளராக புதிதாக நியமிக்கப்பட்ட காசிநாதன் சசிகரன் இன்றைய தினம் திங்கட்கிழமை மாவட்ட செயலர் மருதலிங்கம் பிரதீபன் முன்னிலையில் தமது கடமைகளை உத்தியோகபூர்வமாகப் பொறுப்பேற்றுக் கொண்டார்.
இவர் இதற்கு முன்னர் கிளிநொச்சி மாவட்ட கைத்தொழில் அபிவிருத்திச் சபையின் பிரதிப் பணிப்பாளராக கடமையாற்றியவர் என்பது குறிப்பிடத்தக்கது.











