EyeTamil News
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • விளையாட்டு
  • சினிமா
  • தொழில்நுட்பம்
Watch Live
பெறுபேறு கிடைக்கவில்லை
அனைத்து பெறுபேறுகளையும் பார்க்கவும்
  • கனடா
  • கியூபெக்
  • ஆரோக்கியம்
  • ஆன்மீகம்
  • துயர் பகிர்வு
  • இன்றைய ராசிபலன்
  • எம்மவர் நிகழ்வுகள்
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • விளையாட்டு
  • சினிமா
  • தொழில்நுட்பம்
பெறுபேறு கிடைக்கவில்லை
அனைத்து பெறுபேறுகளையும் பார்க்கவும்
EyeTamil News
Watch Live
முகப்பு அண்மைய செய்திகள்
வடக்கு சுகாதாரத்துறையின் நிதி மற்றும் நிர்வாக சவால்கள் குறித்து ஆராய்வு

வடக்கு சுகாதாரத்துறையின் நிதி மற்றும் நிர்வாக சவால்கள் குறித்து ஆராய்வு

புரட்டாதி 19, 2026
வகை: அண்மைய செய்திகள், இலங்கை
A A
Share on FacebookShare on Twitter

வடக்கு மாகாண சுகாதார சேவையின் நடைமுறைச் சவால்கள், மருத்துவமனைகள் எதிர்நோக்கும் பிரச்சினைகள் மற்றும் மாகாண சுகாதாரத்துறையை மேலும் வலுப்படுத்துவதற்கான நடவடிக்கைகள் தொடர்பில் சுகாதார மற்றும் வெகுசன ஊடகத்துறை அமைச்சர் மருத்துவர் நளிந்த ஜயதிஸ்ஸ மற்றும் வடக்கு மாகாண ஆளுநர் நா.வேதநாயகன் தலைமையில் மாகாண அதிகாரிகளுக்கிடையிலான கலந்துரையாடல் இன்றைய தினம் சனிக்கிழமை ஆளுநர் செயலகத்தில் நடைபெற்றது.

இலங்கையிலுள்ள மாகாண சபைகளில் வடக்கு மாகாண சபையே அதிகளவான மருத்துவமனைகளை நிர்வகித்து வருவதுடன், மாவட்டப் பொது மருத்துவமனைகளும் மாகாண சபையின் நிர்வாகத்துக்குட்பட்டே இயங்கி வருகின்றமை தொடர்பில் அமைச்சருக்கு விரிவாக எடுத்துரைக்கப்பட்டது. இதனைக் கருத்திற்கொண்டு, ஏனைய மாகாணங்களுடன் ஒப்பிடுகையில் வடக்கு மாகாண சுகாதாரத்துறைக்கு அதிகளவான மூலதன மற்றும் பராமரிப்பு நிதி ஒதுக்கீடு தேவைப்படுவதாகவும் வலியுறுத்தப்பட்டது.

குறிப்பாக, நிதி ஆணைக்குழுவால் அனுமதிக்கப்படும் பராமரிப்பு நிதி போதுமானதாக இல்லாத நிலை தொடர்பில் விரிவாக விளக்கமளிக்கப்பட்டதுடன், அதிகளவான மருத்துவமனைகள் மற்றும் அவற்றின் உட்கட்டமைப்புகளைப் பராமரிக்க வேண்டியிருப்பதால் மாகாண சுகாதாரத்துறைக்கு ஏற்படும் நிதிச் சுமையும் சுட்டிக்காட்டப்பட்டது.

மேலும், மருத்துவமனைகளுக்குத் தனித்தனியாக நிதி ஒதுக்கீடுகள் வழங்கப்படாமல், மாகாண சுகாதாரத் திணைக்களத்துக்கான ஒதுக்கீடாக ஒருங்கிணைந்த முறையில் நிதி வழங்கப்படுவதால் நடைமுறையில் ஏற்படும் பல்வேறு சிக்கல்கள் தொடர்பிலும் அமைச்சருக்கு விரிவாக எடுத்துரைக்கப்பட்டது.

இதனுடன், மருத்துவமனைகளின் தேவைகளை முறையாக ஒழுங்குபடுத்தி முன்னுரிமைப்படுத்துதல், தேவைகளின் அடிப்படையில் நிதி ஒதுக்கீடுகளை மேற்கொள்ளுதல் மற்றும் கொள்முதல் செயன்முறைகளில் காணப்படும் நடைமுறைச் சிக்கல்கள் தொடர்பிலும் கலந்துரையாடலில் கவனம் செலுத்தப்பட்டது.

வடக்கு மாகாண சுகாதார சேவையின் தற்போதைய தேவைகள் மற்றும் நடைமுறைச் சவால்களுக்கு எவ்வாறு தீர்வு காணலாம் என்பது தொடர்பிலும், குறிப்பாக மேலதிக நிதி ஒதுக்கீட்டை பெற்றுக்கொள்வது உள்ளிட்ட விடயங்களில் நிதி ஆணைக்குழுவுடன் கலந்துரையாடி உரிய நடவடிக்கைகளை முன்னெடுப்பதாக அமைச்சர் மருத்துவர் நளிந்த ஜயதிஸ்ஸ தெரிவித்தார்.

இக்கலந்துரையாடலில் வடக்கு மாகாண பிரதம செயலாளர், வடக்கு மாகாண ஆளுநரின் செயலாளர், மாகாண சுகாதார அமைச்சின் செயலாளர், பிரதிப் பிரதம செயலாளர் (நிதி), பிரதிப் பிரதம செயலாளர் (திட்டமிடல்), ஆளுநரின் பிரத்தியேக செயலாளர் ஆகியோர் பங்கேற்றனர்.

தொடர்புடைய செய்திகள்

ஹட்டன் – டிக்கோயா குப்பை திட்டத்திற்கு எதிராக மக்கள் போராட்டம்
அண்மைய செய்திகள்

ஹட்டன் – டிக்கோயா குப்பை திட்டத்திற்கு எதிராக மக்கள் போராட்டம்

புரட்டாதி 19, 2026
மோடியின் உதவியை நாடுமாறு ஜனாதிபதியிடம் மனோ கணேசன் கோரிக்கை
அண்மைய செய்திகள்

மோடியின் உதவியை நாடுமாறு ஜனாதிபதியிடம் மனோ கணேசன் கோரிக்கை

புரட்டாதி 19, 2026
புத்தூரில் வயோதிப பெண் அடித்துக் கொலை
அண்மைய செய்திகள்

யாழில் பொலிஸார் மறித்த இளைஞன் மரணம்

புரட்டாதி 19, 2026
கைதடியில் புதிய தபால் நிலையம் திறப்பு
அண்மைய செய்திகள்

கைதடியில் புதிய தபால் நிலையம் திறப்பு

புரட்டாதி 19, 2026
வவுனியா கந்தபுரம் மயானத்தில் ரி-56 ரக துப்பாக்கிக்கான மகசின்கள் மீட்பு
இலங்கை

வவுனியா கந்தபுரம் மயானத்தில் ரி-56 ரக துப்பாக்கிக்கான மகசின்கள் மீட்பு

புரட்டாதி 19, 2026
தியாக தீபம் நினைவிட ஒலிபெருக்கி பறிமுதல் – பொலிஸ் பொறுப்பதிகாரியுடன் கஜேந்திரகுமார் பேச்சு
அண்மைய செய்திகள்

தியாக தீபம் நினைவிட ஒலிபெருக்கி பறிமுதல் – பொலிஸ் பொறுப்பதிகாரியுடன் கஜேந்திரகுமார் பேச்சு

புரட்டாதி 19, 2026
# # #
விளம்பரம்

வாராந்திர செய்திகள்

இன்றைய செய்திகள்
சனிவெள்ளிவியாழன்புதன்செவ்வாய்திங்கள்

சிறப்புச் செய்திகள்

சமூக உயர்வுக்கு வித்திட்ட ஆசிரியர்களுக்கு வவுனியா பழைய மாணவர்கள் கௌரவிப்பு

சமூக உயர்வுக்கு வித்திட்ட ஆசிரியர்களுக்கு வவுனியா பழைய மாணவர்கள் கௌரவிப்பு

7 நாட்கள் முன்னர்
வடக்கு மாகாண கடற்றொழில் சங்கங்களின் சம்மேளனத்தினர் முன்வைத்துள்ள குற்றம்சாட்டு

வடக்கு மாகாண கடற்றொழில் சங்கங்களின் சம்மேளனத்தினர் முன்வைத்துள்ள குற்றம்சாட்டு

5 நாட்கள் முன்னர்
இரவு ரயில் பயணிகளுக்கு முக்கிய அறிவிப்பு

இரவு ரயில் பயணிகளுக்கு முக்கிய அறிவிப்பு

4 நாட்கள் முன்னர்
வடக்கு சுகாதாரத்துறையின் நிதி மற்றும் நிர்வாக சவால்கள் குறித்து ஆராய்வு

வடக்கு சுகாதாரத்துறையின் நிதி மற்றும் நிர்வாக சவால்கள் குறித்து ஆராய்வு

11 மணத்தியாலங்கள் முன்னர்
யாழில். நீதிமன்றில் சாட்சியமளித்தவர் மீது வாள் வெட்டு – நால்வர் கைது

யாழில். நீதிமன்றில் சாட்சியமளித்தவர் மீது வாள் வெட்டு – நால்வர் கைது

6 நாட்கள் முன்னர்

எம்மவர் நிகழ்வுகள்

மன்னிக்கவும், நிகழ்வுகள் எதுவும் இல்லை!
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • விளையாட்டு
  • சினிமா
  • தொழில்நுட்பம்
+94 77 812 0744

© 2024 Eye Tamil Media Network | All Rights Reserved

பெறுபேறு கிடைக்கவில்லை
அனைத்து பெறுபேறுகளையும் பார்க்கவும்
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • விளையாட்டு
  • சினிமா
  • தொழில்நுட்பம்
  • கனடா
  • கியூபெக்
  • ஆரோக்கியம்
  • ஆன்மீகம்
  • துயர் பகிர்வு
  • இன்றைய ராசிபலன்

© 2024 Eye Tamil Media Network | All Rights Reserved

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In