இயக்குநர் பாலாஜி மோகன் இயக்கத்தில், நடிகர்கள் அர்ஜுன் தாஸ் மற்றும் ஐஸ்வர்யா லெக்ஷ்மி பிரதான கதாபாத்திரங்களில் நடித்துள்ள ‘லவ்’ (#Love) இணையத்தொடரின் (Web Series) டிரெய்லர் அதிகாரப்பூர்வமாக வெளியிடப்பட்டுள்ளது.
காதல் மற்றும் நகைச்சுவைக் பின்னணியில் உருவாகியுள்ள இத்தொடரின் டிரெய்லர், வெளியானது முதல் ரசிகர்களிடையே நல்ல வரவேற்பைப் பெற்று வருகிறது.
முன்னதாக வெளியான இத்தொடரின் டீசர் இணையவாசிகளின் கவனத்தை ஈர்த்திருந்த நிலையில், தற்போது வெளியாகியுள்ள டிரெய்லர் தொடரின் மீதான எதிர்பார்ப்பை மேலும் அதிகரித்துள்ளது.
இணையத்தொடரின் ஒளிபரப்புத் தேதி மற்றும் பிற தொழில்நுட்பக் கலைஞர்கள் பற்றிய மேலதிக தகவல்கள் விரைவில் வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.











