EyeTamil News
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • விளையாட்டு
  • சினிமா
  • தொழில்நுட்பம்
Watch Live
பெறுபேறு கிடைக்கவில்லை
அனைத்து பெறுபேறுகளையும் பார்க்கவும்
  • கனடா
  • கியூபெக்
  • ஆரோக்கியம்
  • ஆன்மீகம்
  • துயர் பகிர்வு
  • இன்றைய ராசிபலன்
  • எம்மவர் நிகழ்வுகள்
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • விளையாட்டு
  • சினிமா
  • தொழில்நுட்பம்
பெறுபேறு கிடைக்கவில்லை
அனைத்து பெறுபேறுகளையும் பார்க்கவும்
EyeTamil News
Watch Live
முகப்பு அண்மைய செய்திகள்
தமிழ் மக்களின் உரிமையை பாதுகாக்க இந்தியா முன்வர வேண்டும் – தர்மலிங்கம் சுரேஸ்

தமிழ் மக்களின் உரிமையை பாதுகாக்க இந்தியா முன்வர வேண்டும் – தர்மலிங்கம் சுரேஸ்

புரட்டாதி 26, 2026
வகை: அண்மைய செய்திகள், இலங்கை
வாசிக்கும் நேரம்: 1 நிமிடம்
A A
Share on FacebookShare on Twitter

இந்தியாவின் நலனுக்காக வடக்கு கிழக்கு தமிழ் மக்கள் தொடர்ந்து பின் நிற்கும் எனவே எங்களுடைய மக்களின் நிலையான இருப்பை தக்க வைப்பதற்கு தமிழ் மக்களின் சுயாட்சியை அங்கீகரித்து தமிழ் மக்களுடைய அரசியல் உரிமையை பாதுகாக்க சமஷ்டி முறையை ஏற்படுத்த இந்தியா தொடர்ந்து முன்வரவேண்டும் என தமிழ் தேசிய மக்கள் முன்னணி தேசிய அமைப்பாளர் தர்மலிங்கம் சுரேஸ் தெரிவித்தார்.

மட்டக்களப்பில தியாக தீபம் திலீபனின் 39 ம் ஆண்டு நினைவேந்தல் தமிழ் தேசிய மக்கள் முன்னணி கட்சியின் ஏற்பாட்டில் இன்று சனிக்கிழமை (26) காந்தி பூங்காவில் அன்னாரது திருவுருவப் படத்திற்கு மலர்மாலை அணிவித்து மலர் தூவி சுடர் ஏற்றி எழுச்சியுடன் உணர்வு பூர்வமாக இரண்டு நிமிட மௌன அஞ்சலி செலுத்தினர். அதன் பின்னர் நினைவு பேருரை ஆற்றிய போது அவர் இவ்வாறு தெரிவித்தார்.

தியாக தீபம் திலீபன் இளவயதில் மருத்துவ பட்டப்படிப்பை தொடர்ந்து கொண்ட காலத்தில் வடக்கு கிழக்கில் தமிழர்கள் மீது சிங்களவர்கள் மேற்கொண்ட வன்முறைகள் அத்து மீறிய குடியேற்றம் போன்ற பல வன்முறைகளை தமிழர்கள் மீது கட்டவிழ்த்து விடப்பட்டதை கண்டு கொண்டார்.

இவர் தமிழ் தேசம் மீது கொண்ட பற்றின் காரணமாக இந்த இனத்துக்காக தமிழ் மக்களின் இருப்பு இந்த தீவில் நிலையாக இருக்க வேண்டும் என்பதற்காக தனது மருத்துவ பட்டப்படிப்பை விட்டுவிட்டு தன்னை ஆயுத போராட்டத்தில் இணைத்துக் கொண்டு இந்தியாவிடம் 5 அம்சக் கோரிக்கையை முன்வைத்து அகிம்சை போராட்டத்தில் சாகும் வரை உண்ணாவிரதம் மேற்கொண்டார்.

இந்த அகிம்சை போராட்டத்துக்கு இந்தியா முன் உதாரணமாக இருக்கும் என ஆயுத போராட்டத்தை விட்டு அகிம்சை போராட்டமாக சாகும் வரை உண்ணாவிரம் நல்லூர் ஆலய முன்றலில் தொடர்ந்து 12 நாட்கள் இருந்து உயிரிழந்தார் இந்தியா அந்த அகிம்சை போராட்டத்துக்கு மதிப்பளிக்காத இருந்துள்ளது.

தமிழர்களை பொறுத்த மட்டில் தமிழர்கள் 76 வருடங்கள் அடக்கு முறைக்கு முற்பட்டு தொடர்ந்து போராடி வருகின்றனர் இலங்கைக்கு அண்மையில் இருக்கும் பெரும் வல்லரசான இந்தியாவை நம்பி தமிழ் மக்கள் இந்த தீவில் வாழ்கின்றனர் என வலியுறுத்தி வந்துள்ளோம்.

இந்த வலியுறுத்தலின் உச்சக்கட்டம் தான் தியாக தீபன் அகிம்சை வழி போராட்டம் இந்த நிலையில் தமிழர்கள் தற்பாதுகாப்புக்காக ஆயுதவழி போராட்டம் செய்து கொண்ட போதும் இந்தியாவை முழுமூச்சாக நம்பினர் ஆனால் இந்தி தனது பூலோக அரசியல் நலனுக்காக எங்கள் மக்களின் நலனை கருத்தில் கொள்ளாது எமது மக்களை காக்க தவறிவிட்டது.

இருந்தபோதும் நாங்கள் வடகிழக்கில் தொடர்ந்து போராடி வருகிறோம் இந்த புனிதமான நாளில் அங்கு வெடுக்குநாறி மலையிலே சிவனுக்கு பூஜை செய்வதற்காக எங்கள் மக்கள் போரட்டம் நடாத்தி வருகின்றனர். அங்கு இராணுவம் பொலிசார் குவிக்கப்பட்டுள்ளது.

மக்கள் புரட்சி வெடிக்கட்டும் சுதந்திர தமிழீழம் மலரட்டும் என தீயாக தீபம் திலீபன் கூறிச் சென்றுள்ளார் அந்த போராட்டம் தொடர்ந்து கொண்டிருக்கிறது நாங்கள் இந்தியாவை முழுமூச்சாக நம்பியிருக்கிறோம். இன்று வடகிழக்கில் இந்திய அரசாங்கம் பல அபிவிருத்தி திட்டங்களை செய்து கொண்டிருக்கிறது ஆனால் இந்த நாட்டின் அரசு தங்களின் நலனுக்காக அந்த அபிவிருத்தி பணிகள் இழுபறிகள் செய்கிறது.

ஒற்றையாட்சிக்குள் தமிழ் மக்களின் உரிமைகளை முடக்கி தமிழ் மக்களை தொடர்ச்சியாக அடக்குமுறைக்குள் வைத்துக் கொண்டு தமிழ் மக்களை அடிமையாக்க நாங்கள் தயாரில்லை ஆகவே இந்த விஷயத்தில் இந்தியா செவிமடுக்க வேண்டும்.

உங்களுடைய நலனுக்காக வடகிழக்கு தமிழர்கள் நாங்கள் தொடர்ந்து நிற்போம் ஆனால் எங்களுடைய மக்களின் நிலையான இருப்பை தக்க வைப்பதற்கு மக்களுடைய அரசியல் உரிமையை பாதுகாக்க முன்வர வேண்டும் அத்துடன் தமிழ் மக்களின் சுயாட்சியை அங்கிகரித்து இந்த ஒற்றையாட்சி முறையை ஒழித்து சமஷ்டி முறையை ஏற்படுத்த வேண்டிய தார்மீக கடமை இந்தியாவுக்கு உள்ளது.

2009 கடைசி யுத்தம் வரை எங்கள் மக்கள் இந்தியாவை நம்பி இருந்தனர் ஆனால் அந்த ஆயுத போராட்டம் இந்தியாவால் மௌனி கப்பட்டிருந்தது அது மிகவும் கவலையளிக்கிறது இருந்து போதும் தமிழர்களின் இருப்பை உறுதிப்படுத இந்தியா தொடர்ந்து முன்வர வேண்டும் என்றார்.

தொடர்புடைய செய்திகள்

பொலன்னறுவை வைத்தியசாலையில் வெடிப்பு – 7 பேர் காயம்
அண்மைய செய்திகள்

பொலன்னறுவை வைத்தியசாலையில் வெடிப்பு – 7 பேர் காயம்

புரட்டாதி 26, 2026
ஞானசார தேரருக்கு மீண்டும் பொதுமன்னிப்பு கோரி 50 இலட்சம் கையெழுத்து திரட்டல் ஆரம்பம்
அண்மைய செய்திகள்

ஞானசார தேரருக்கு மீண்டும் பொதுமன்னிப்பு கோரி 50 இலட்சம் கையெழுத்து திரட்டல் ஆரம்பம்

புரட்டாதி 26, 2026
ஹரக் கட்டா’வின் உயிருக்கு அச்சுறுத்தல் – மனித உரிமைகள் ஆணைக்குழுவில் முறைப்பாடு
இலங்கை

ஹரக் கட்டா’வின் உயிருக்கு அச்சுறுத்தல் – மனித உரிமைகள் ஆணைக்குழுவில் முறைப்பாடு

புரட்டாதி 26, 2026
பருத்தித்துறையில் தியாக தீபத்திற்கு அஞ்சலி
அண்மைய செய்திகள்

பருத்தித்துறையில் தியாக தீபத்திற்கு அஞ்சலி

புரட்டாதி 26, 2026
மட்டக்களப்பு தியாகதீபம் திலீபனின் 39ஆம் ஆண்டு நினைவேந்தல்
அண்மைய செய்திகள்

மட்டக்களப்பு தியாகதீபம் திலீபனின் 39ஆம் ஆண்டு நினைவேந்தல்

புரட்டாதி 26, 2026
மேல் மாகாண போக்குவரத்து அதிகார சபையின் முன்னாள் தலைவர் கைது
அண்மைய செய்திகள்

பண்டாரவளை பகுதியில் போதைப்பொருள் விற்பனை – ஒருவர் கைது!

புரட்டாதி 26, 2026
# # #
விளம்பரம்

வாராந்திர செய்திகள்

இன்றைய செய்திகள்
சனிவெள்ளிவியாழன்புதன்செவ்வாய்திங்கள்

சிறப்புச் செய்திகள்

யானை தாக்குதலுக்கு இலக்காகி குடும்பஸ்தர் ஒருவர் பலி

யானை தாக்குதலுக்கு இலக்காகி குடும்பஸ்தர் ஒருவர் பலி

1 நாள் முன்னர்
வவுனியாவில் தியாக திலீபனின் 39 ஆவது ஆண்டு நினைவேந்தல்!

வவுனியாவில் தியாக திலீபனின் 39 ஆவது ஆண்டு நினைவேந்தல்!

12 மணத்தியாலங்கள் முன்னர்
வெடுக்குநாறிமலை வழிபாடு தொடர்பான பொலிசாரின் விண்ணப்பம் நீதிமன்றால் நிராகரிப்பு

வெடுக்குநாறிமலை வழிபாடு தொடர்பான பொலிசாரின் விண்ணப்பம் நீதிமன்றால் நிராகரிப்பு

2 நாட்கள் முன்னர்
கீரிமலையில் அகற்றப்பட்ட ஆபத்தான மருத்துவக் கழிவுகள்

கீரிமலையில் அகற்றப்பட்ட ஆபத்தான மருத்துவக் கழிவுகள்

6 நாட்கள் முன்னர்
கிளிநொச்சியில் இடம்பெற்ற விசேட கலந்துரையாடல்

கிளிநொச்சியில் இடம்பெற்ற விசேட கலந்துரையாடல்

2 நாட்கள் முன்னர்

எம்மவர் நிகழ்வுகள்

மன்னிக்கவும், நிகழ்வுகள் எதுவும் இல்லை!
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • விளையாட்டு
  • சினிமா
  • தொழில்நுட்பம்
+94 77 812 0744

© 2024 Eye Tamil Media Network | All Rights Reserved

பெறுபேறு கிடைக்கவில்லை
அனைத்து பெறுபேறுகளையும் பார்க்கவும்
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • விளையாட்டு
  • சினிமா
  • தொழில்நுட்பம்
  • கனடா
  • கியூபெக்
  • ஆரோக்கியம்
  • ஆன்மீகம்
  • துயர் பகிர்வு
  • இன்றைய ராசிபலன்

© 2024 Eye Tamil Media Network | All Rights Reserved

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
imunify-bot-check