ஈஸ்டர் தாக்குதல் தொடர்பான முக்கிய விபரங்களை வெளியிட்ட அசாத் மௌளானாவின் தந்தை ஈ.பி.ஆர்.எல்.எப் உறுப்பினர். பத்மநாபா இந்தியாவில் புலிகளினால் சுட்டு கொலை செய்யும் போது, அவரும் உயிரிழந்துள்ளார்.
புலிகளால் சுட்டு கொலை செய்யப்பட்ட ஒருவரின் மகன் என்ற ரீதியில், அவருக்கு மரமுந்திரை கூட்டுத்தாபனத்தில் வேலை பெற்றுக்கொடுத்தேன் என முன்னாள் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா தெரிவித்துள்ளார்.
யாழில் இன்றைய தினம் புதன்கிழமை நடைபெற்ற ஊடக சந்திப்பின் போதே அவர் இவ்வாறு தெரிவித்தார்.











