வடமாகாண கல்வி பண்பாட்டலுவல்கள் விளையாட்டுத்துறை மற்றும் இளைஞர் விவகார அமைச்சின் பண்பாட்டலுவல்கள் அலகின் ஏற்பாட்டில் “வடமாகாண பண்பாட்டு விழா யாழ்ப்பாணத்தில் நடைபெற்றது.
திருவள்ளுவர் பண்பாட்டு மையத்தில் இன்றைய தினம் செவ்வாய்க்கிழமை நடைபெற்றது.
விழாவின் முன்னதாக பண்பாட்டு ஊர்வலம் முற்றவெளி பகுதியில் ஆரம்பித்து, திருவள்ளுவர் பண்பாட்டு மையத்தை வந்தடைந்ததை தொடர்ந்து மேடை நிகழ்வுகள் இடம்பெற்றன.
மேடை நிகழ்வில் வடமாகாண பண்பாட்டை பிரதிபலிக்கும் கலாச்சார நிகழ்வுகள் இடம்பெற்றதுடன், “வடந்தை” நூல் வெளியீடும் இடம்பெற்றது.
தொடர்ந்து, இளங்கலைஞர் விருது வழங்கல், கலைக்குரிசில் விருது வழங்கல், சிறந்த நூல் விருது வழங்கல் போன்ற நிகழ்வுகள் இடம்பெற்றன.
நிகழ்வில் பிரதம விருந்தினர்களாக கடற்தொழில் அமைச்சர் இராமலிங்கம் சந்திரசேகர், கூட்டுறவு அபிவிருத்தி பிரதி அமைச்சர் ஆர்.எச் உபாலி சமரசிங்க, வடமாகாண ஆளுநர் நா. வேதநயாகன் ஆகியோர் கலந்து கொண்டனர்.











