மன்னார் மாவட்ட பொது வைத்தியசாலையில் 200 மில்லியன் ரூபாய் நிதி ஒதுக்கீட்டில் அமைக்கப்படவுள்ள குழந்தை நலப் பிரிவு கட்டிடத்தொகுதி மற்றும் வைத்தியர்களுக்கான விடுதித் தொகுதி அமைப்பதற்கான அடிக்கல் நாட்டும் நிகழ்வு இன்று வியாழக்கிழமை (15.10.2026) காலை 10 மணியளவில் நடைபெற்றது.
மன்னார் மாவட்ட பொது வைத்தியசாலையின் பிரதிப் பணிப்பாளர் தலைமையில் இந்நிகழ்வு நடைபெற்றது.
பிரதி அமைச்சர்களான அன்ரன் ஜெயக்கொடி, உபாலி சமரசிங்க மற்றும் பாராளுமன்ற உறுப்பினர் எம்.ஜெகதீஸ்வரன் ஆகியோர் கலந்துகொண்டு அடிக்கல்லை நாட்டி வைத்தனர்.
இதன்போது மன்னார் மாவட்ட அரசாங்க அதிபர், வைத்தியர்கள் மற்றும் வைத்தியசாலைப் பணியாளர்களும் கலந்துகொண்டு அடிக்கல்லை நாட்டி வைத்தனர்.
மன்னார் மாவட்ட வைத்தியசாலையில் சுகாதாரத் துறையை மேம்படுத்தும் பொருட்டு, கடந்த இரண்டு மாத காலப்பகுதியில் சுமார் 1,000 மில்லியன் ரூபா பெறுமதியான கட்டிடக் கட்டுமானப் பணிகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளன.
முன்னதாக, ஜனாதிபதி அவர்களின் தலைமையில் 600 மில்லியன் ரூபா பெறுமதியான விபத்து மற்றும் அவசர சேவைகள் பிரிவுக்கான அடிக்கல் நாட்டப்பட்டு, அதற்கான 600 மில்லியன் ரூபா பணிகள் ஆரம்பிக்கப்பட்டிருந்தன.
இந்த நிலையில், இன்றைய தினம் வியாழக்கிழமை (15.10.2026) குழந்தை நலப் பிரிவுக்காக 4 மாடிகளைக் கொண்ட கட்டிடத் தொகுதியும், வைத்தியர்களுக்கான விடுதித் தொகுதியும் அமைப்பதற்கான பணிகள் அடிக்கல் நாட்டப்பட்டு ஆரம்பித்து வைக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.











