இலங்கையில் இன்று (17) நாடு முழுவதும் ஏற்பட்ட மின்தடையைத் தொடர்ந்து, நீர் விநியோக நடவடிக்கைகளும் பாதிக்கப்பட்டுள்ளதாகத் தெரிவிக்கப்பட்டிருந்தது.
இந்நிலையில் தற்போது பெரும்பாலான பகுதிகளுக்கு
மின்சார விநியோகம் வழமைக்குத் திரும்பியதைத் தொடர்ந்து, அம்பத்தலே நீர் சுத்திகரிப்பு நிலையத்தின் நீர் விநியோகம் உள்ளிட்ட செயற்பாடுகள் மீண்டும் ஆரம்பிக்கப்பட்டுள்ளதாக தேசிய நீர் வழங்கல் மற்றும் வடிகாலமைப்புச் சபை தெரிவித்துள்ளது.











