EyeTamil News
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • விளையாட்டு
  • சினிமா
  • தொழில்நுட்பம்
Watch Live
பெறுபேறு கிடைக்கவில்லை
அனைத்து பெறுபேறுகளையும் பார்க்கவும்
  • கனடா
  • கியூபெக்
  • ஆரோக்கியம்
  • ஆன்மீகம்
  • துயர் பகிர்வு
  • இன்றைய ராசிபலன்
  • எம்மவர் நிகழ்வுகள்
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • விளையாட்டு
  • சினிமா
  • தொழில்நுட்பம்
பெறுபேறு கிடைக்கவில்லை
அனைத்து பெறுபேறுகளையும் பார்க்கவும்
EyeTamil News
Watch Live
முகப்பு அண்மைய செய்திகள்
யாழில் உள்ள டக்ளஸ் தேவானந்தாவின் அலுவலகத்தில் சிஐடி சோதனை

யாழில் உள்ள டக்ளஸ் தேவானந்தாவின் அலுவலகத்தில் சிஐடி சோதனை

ஐப்பசி 19, 2026
வகை: அண்மைய செய்திகள், இலங்கை
A A
Share on FacebookShare on Twitter

யாழ்ப்பாணத்தில் அமைந்துள்ள ஈழ மக்கள் ஜனநாயகக் கட்சியின் தலைமை அலுவலகத்தில், குற்றப் புலனாய்வுத் திணைக்களத்தினர் நீண்ட நேரம் சோதனை நடவடிக்கையில் ஈடுபட்டுள்ளனர்.

யாழ்ப்பாணம் ஸ்ரான்லி வீதியில், முன்னர் ஸ்ரீதர் திரையரங்கு இயங்கிய கட்டடத்தில் அமைந்துள்ள கட்சி அலுவலகத்திலேயே இந்தத் தேடுதல் நடவடிக்கை முன்னெடுக்கப்பட்டுள்ளது.

குற்றப் புலனாய்வுத் திணைக்களத்திற்குக் கிடைத்த இரகசியத் தகவலின் அடிப்படையில், யாழ்ப்பாணம் நீதவான் நீதிமன்றத்தின் தேடுதல் அனுமதியைப் பெற்று இந்த நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டதாகத் தெரிவிக்கப்படுகிறது.

தேடுதல் நடவடிக்கையைத் தொடர்ந்து, கட்சியின் செயலாளர் டக்ளஸ் தேவானந்தா மற்றும் நிர்வாகப் பொறுப்பாளர் ஆகியோரிடம் வாக்குமூலங்களும் பெறப்பட்டுள்ளன.

கடந்த 2001ஆம் ஆண்டு டக்ளஸ் தேவானந்தாவின் தனிப்பட்ட பயன்பாட்டிற்காக இராணுவத்தினால் வழங்கப்பட்ட துப்பாக்கி, 2019ஆம் ஆண்டு திட்டமிட்ட குற்றச் செயல்களுடன் தொடர்புடைய மாகந்துர மதூஷிடம் இருந்து கண்டெடுக்கப்பட்ட சம்பவம் தொடர்பிலும் விசாரணைகள் இடம்பெற்று வருகின்றன.

இந்த விவகாரம் தொடர்பான விசாரணைகளுக்காக டக்ளஸ் தேவானந்தா கடந்த ஆண்டு டிசம்பர் மாதம் கைது செய்யப்பட்டு விளக்கமறியலில் வைக்கப்பட்ட பின்னர் பிணையில் விடுவிக்கப்பட்டிருந்தார்.

அதேவேளை, ஈழ மக்கள் ஜனநாயகக் கட்சியினரால் மீளக் கையளிக்கப்பட்ட துப்பாக்கிகள் உள்ளிட்ட ஆயுதங்கள் தொடர்பாகவும் விசாரணைகள் முன்னெடுக்கப்பட்டுள்ளன.

மேலும், உயிர்த்த ஞாயிறு தாக்குதல் தொடர்பில் தகவல்களை வெளியிட்ட ஆசாத் மௌலானாவுக்கு வேலைவாய்ப்பு வழங்கியமை தொடர்பாகவும் அண்மையில் டக்ளஸ் தேவானந்தாவிடம் குற்றப் புலனாய்வுத் திணைக்களத்தினர் விசாரணைகளை மேற்கொண்டிருந்தனர்.

இவ்வாறான பின்னணியில், யாழ்ப்பாணத்தில் அமைந்துள்ள டக்ளஸ் தேவானந்தாவின் கட்சித் தலைமை அலுவலகத்தில் தற்போது சோதனை நடவடிக்கை முன்னெடுக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

தொடர்புடைய செய்திகள்

பொரளை பகுதியில் போக்குவரத்து கட்டுப்பாடு
அண்மைய செய்திகள்

பொரளை பகுதியில் போக்குவரத்து கட்டுப்பாடு

ஐப்பசி 20, 2026
கண்டியில் 42 மணி நேர நீர் விநியோகத் தடை – பொதுமக்களுக்கு அறிவுறுத்தல்
அண்மைய செய்திகள்

கண்டியில் 42 மணி நேர நீர் விநியோகத் தடை – பொதுமக்களுக்கு அறிவுறுத்தல்

ஐப்பசி 20, 2026
யாழ். அரியாலை பகுதியில் பெருமளவான  துப்பாக்கி ரவைகள் மீட்பு
அண்மைய செய்திகள்

யாழ். அரியாலை பகுதியில் பெருமளவான துப்பாக்கி ரவைகள் மீட்பு

ஐப்பசி 20, 2026
மின் விநியோகக் கட்டமைப்பை மீண்டும் சீரமைப்பதே எங்களின் முக்கிய பணியாகும் – நலிந்த ஜெயதிஸ்ஸ
அண்மைய செய்திகள்

மின் விநியோகக் கட்டமைப்பை மீண்டும் சீரமைப்பதே எங்களின் முக்கிய பணியாகும் – நலிந்த ஜெயதிஸ்ஸ

ஐப்பசி 20, 2026
காவன்திஸ்ஸ யானையின் இறப்புக்கு நீதி கோரி போராட்டம் முன்னெடுப்பு
இலங்கை

காவன்திஸ்ஸ யானையின் இறப்புக்கு நீதி கோரி போராட்டம் முன்னெடுப்பு

ஐப்பசி 20, 2026
செம்மணியில் தொற்றுநோய் அல்லது பேரிடரால் உயிரிழந்தோர் புதைக்கப்பட்டிருக்கலாம்
இலங்கை

செம்மணியில் தொற்றுநோய் அல்லது பேரிடரால் உயிரிழந்தோர் புதைக்கப்பட்டிருக்கலாம்

ஐப்பசி 20, 2026
# # #
விளம்பரம்

வாராந்திர செய்திகள்

இன்றைய செய்திகள்
செவ்வாய்திங்கள்ஞாயிறுசனிவெள்ளிவியாழன்

சிறப்புச் செய்திகள்

முன்னாள் அமைச்சர் பெசில் ராஜபக்ஷவுக்கு பிடியாணை உத்தரவு

முன்னாள் அமைச்சர் பெசில் ராஜபக்ஷவுக்கு பிடியாணை உத்தரவு

6 நாட்கள் முன்னர்
யாழில் வேலையற்ற பட்டதாரிகளால் போராட்டம் முன்னெடுப்பு

யாழில் வேலையற்ற பட்டதாரிகளால் போராட்டம் முன்னெடுப்பு

1 நாள் முன்னர்
வவுனியாவில் சிறப்பாக இடம்பெற்ற விஜயதசமி வழிபாடுகள்

வவுனியாவில் சிறப்பாக இடம்பெற்ற விஜயதசமி வழிபாடுகள்

9 மணத்தியாலங்கள் முன்னர்
பம்பலப்பிட்டியில் உள்ள அடுக்குமாடி குடியிருப்பில் திடீர் தீப்பரவல்

பம்பலப்பிட்டியில் உள்ள அடுக்குமாடி குடியிருப்பில் திடீர் தீப்பரவல்

6 நாட்கள் முன்னர்
தொடர் மழையால் ஹப்புத்தளை நகரில் வெள்ளம்

தொடர் மழையால் ஹப்புத்தளை நகரில் வெள்ளம்

4 நாட்கள் முன்னர்

எம்மவர் நிகழ்வுகள்

மன்னிக்கவும், நிகழ்வுகள் எதுவும் இல்லை!
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • விளையாட்டு
  • சினிமா
  • தொழில்நுட்பம்
+94 77 812 0744

© 2024 Eye Tamil Media Network | All Rights Reserved

பெறுபேறு கிடைக்கவில்லை
அனைத்து பெறுபேறுகளையும் பார்க்கவும்
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • விளையாட்டு
  • சினிமா
  • தொழில்நுட்பம்
  • கனடா
  • கியூபெக்
  • ஆரோக்கியம்
  • ஆன்மீகம்
  • துயர் பகிர்வு
  • இன்றைய ராசிபலன்

© 2024 Eye Tamil Media Network | All Rights Reserved

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
imunify-bot-check